ADVERTISEMENT

UAE: இஃப்தார் உணவுகளை விநியோகிக்க விதிகளை மீறுபவர்களுக்கு 3 இலட்சம் திர்ஹம்ஸ் வரை அபராதம்..!! அதிகாரிகள் எச்சரிக்கை..!!

Published: 15 Apr 2023, 8:59 AM |
Updated: 15 Apr 2023, 9:16 AM |
Posted By: Menaka

உணவகங்கள் மற்றும் கேட்டரிங் செய்பவர்கள் இஃப்தார் உணவுகளை விநியோகிக்குமாறு அவர்களுக்கு பணம் வழங்கும் அபுதாபி குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள், இத்தகைய செயலை தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதாவது அபுதாபியில் எந்தவொரு தொண்டு நன்கொடைகளும் நிதி உதவிகளும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று அபுதாபியின் சமூக மேம்பாட்டுத் துறை (Department of Community Development – DCD) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், அனுமதியின்றி நிதி திரட்டும் அல்லது நன்கொடை சேகரிக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் 150,000 க்கும் குறையாத மற்றும் 300,000 திர்ஹம்களுக்கு மேல் மிகாத அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று DCD அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் மத்திய சட்ட எண் (3)-இன் படி, இஃப்தார் உணவுகளை தயாரிப்பதற்காக உணவகங்களுக்கு அவுட்சோர்சிங் மற்றும் பணம் செலுத்துவது சட்டவிரோதமானது என்பதையும் இந்த துறை சுட்டிக் காட்டியுள்ளது.

அதேசமயம், அக்கம்பக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கு இஃப்தார் உணவு தயாரித்தல், வாங்குதல், விநியோகம் செய்தல், வழிப்போக்கர்களுக்கு உணவு மற்றும் பேரீச்சம் பழங்கள் வழங்குதல், மசூதிகளில் தண்ணீர் வைப்பது போன்றவை சட்டத்தை மீறாதவையாக கருதப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, தொண்டு செய்ய விரும்பும் நபர்கள், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நன்கொடைப் பெட்டிகளுக்கு நிதி அல்லது பொருள் உதவிகளை செய்யலாம் என்று DCD ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. DCD சட்ட கட்டமைப்புகள் மற்றும் சட்டங்களின்படி, இது நன்கொடை செய்பவர்களின் நிதிகளைப் பாதுகாப்பதன் மூலம் நன்கொடைகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது மற்றும் அவை சரியான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்கிறது என கூறப்பட்டுள்ளது.

நிதி மற்றும் நன்கொடைகளை சேகரிக்க உரிமம் பெற்ற நிறுவனங்களை தவிர்த்து அபுதாபியில் DCD இன் அனுமதியின்றி, எந்தவொரு நிதி திரட்டும் அல்லது நன்கொடை சேகரிக்கும் செயல்களையும் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT