அமீரக செய்திகள்

UAE: இலவசமாக பதினெட்டு நாட்களுக்கு படகு சேவை.. குடும்பத்துடன் குதூகலிக்க அபுதாபி மரைடைம் அளித்துள்ள வாய்ப்பு….

அபுதாபியில் வரும் ஏப்ரல் 28 முதல் மே 15 வரை நடைபெறவுள்ள டெல்மா ரேஸ் பெஸ்டிவலை முன்னிட்டு டெல்மா ஐலேண்ட் முதல் ஜெபல் தன்னா இடையேயான வழித்தடத்தில் படகு போக்குவரத்து இலவசம் என்று அபுதாபி மரைடைம் (abudhabi maritime) கடந்த ஏப்ரல்.25 அன்று அறிவித்துள்ளது.

அபுதாபி எமிரேட்டிற்கு உட்பட்ட அல் தஃப்ரா பிராந்தியத்தின் ஆட்சியாளரின் பிரதிநிதியான ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஆதரவின் கீழ் 18 நாள் நடைபெறும் இந்த டெல்மா ரேஸ் பெஸ்டிவலில் 3,000க்கும் மேற்பட்ட கப்பலோட்டிகள், 80 கடல் மைல்கள் (125 கிமீ தூரம்) 60 அடி பாரம்பரிய தோவ் பந்தயத்தில் (dhow race) கலந்து கொள்வார்கள். அத்துடன்  பார்வையாளர்களுக்கு குறிப்பாக குடும்பங்கள் இதனை அனுபவித்து மகிழ்வதற்கு மாலை நேரங்களில் சிறப்பு படகுகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி மரைடைம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், AD போர்ட்ஸ் அதன் குழுமத்தின் ஒரு பகுதியான டல்மா தீவு மற்றும் ஜெபல் தன்னா இடையே இயக்கப்படும் பெர்ரி படகுகளில், பெஸ்டிவல் காலத்தின் போது கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கும். அதேசமயம், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கொண்டாட்டங்களை மேலும் அனுபவிக்கும் வகையில், பெஸ்டிவல் காலத்தில் கூடுதல் ஈவ்னிங் சர்வீஸ் திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி மரைடைம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேப்டன் சைஃப் அல் மஹெய்ரி என்பவர் கூறுகையில், டால்மா ரேஸ் பெஸ்டிவலின் ஆறாவது பதிப்பிற்கு ஆதரவாளராக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, பெஸ்டிவலின் போது இளைய தலைமுறையினர் டல்மா தீவு-ஜபெல் தன்னா படகில் இலவச பயணத்தை அனுபவிக்க அனுமதிப்பதன் மூலம், இந்த அறிய நிகழ்வை அனைவரும் நேரடியாக அனுபவிப்பதை இது உறுதி செய்யும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், https://www.admaritime.ae/ என்ற லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம், அனைத்து பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நேரத்தைச் சரிபார்த்து தங்கள் டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!