அமீரக செய்திகள்

துபாய்: தற்காலிகமாக மூடப்படும் அல் மக்தூம் பிரிட்ஜ்..!! வாகன ஓட்டிகளுக்கான மாற்று வழி என்ன…??

துபாயில் உள்ள அல் மக்தூம் பிரிட்ஜ் கடந்த மார்ச் 30, 2023 முதல் தற்காலிகமாக வாகனங்களின் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. அதாவது, ரமலான் மாதத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, வாரத்தில் 6 நாட்களுக்கு மதியம் 1:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தற்காலிக மூடல் ரமலான் மாதம் முழுவதும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகாலையில் பாலத்தில் செல்ல மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரமலான் மாதம் முழுவதும் 6 நாட்களுக்கு அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை வாகன ஓட்டிகள் செல்லக்கூடிய மாற்றுவழிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • அல் கர்ஹூத் பிரிட்ஜ் (ஷேக் சயீத் சாலை/E11)
  • பிசினஸ் பே பிரிட்ஜ் (அல் கைல் சாலை/D68)
  • அல் ஷிந்தகா சுரங்கப்பாதை (அல் கலீஜ் ஸ்ட்ரீட்/D98)
  • இன்ஃபினிட்டி பிரிட்ஜ் (இன்ஃபினிட்டி பிரிட்ஜ் ரோடு/D85)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாலங்களும், அல் மக்தூம் பிரிட்ஜ் மற்றும் ஃப்ளோட்டிங் பிரிட்ஜூடன், துபாயில் உள்ள பர் துபாய் மற்றும் தேரா பகுதிகளை இணைக்கின்றன. இந்நிலையில், நீங்கள் கட்டணமில்லா பாதையில் செல்ல விரும்பினால், அல் கர்ஹூத் பிரிட்ஜை தவிர்க்கலாம். மேலும், நீங்கள் பிசினஸ் பே பிரிட்ஜ் வழியாகச் சென்றால், பெய்ரூட் ஸ்ட்ரீட்டில் உள்ள விமான நிலைய சுரங்கப்பாதையைத் தவிர்க்க வேண்டும் (D62).

ஃப்ளோட்டிங் பிரிட்ஜை ஏன் பயன்படுத்த முடியாது?

அல் மக்தூம் பாலம் தற்காலிகமாக ரமலானின் போது மட்டுமே மூடப்பட்டிருந்தாலும், வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில்  ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் சில நேரங்களில் மூடப்படும்.

ப்ளோட்டிங் பிரிட்ஜ் மூடப்படும் நேரம்:

திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்களுக்கு இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரையிலும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் க்ரீக்கில் கப்பல்கள் மற்றும் பிற கடல் போக்குவரத்து வாகனங்கள் செல்ல வசதியாக, மேலே பட்டியலிடப்பட்டுள்ள நேரத்தில் ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!