அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ர் விடுமுறையில் பூங்காக்கள் செயல்படும் நேரங்களை அறிவித்துள்ள துபாய் முனிசிபாலிட்டி..!!

துபாய் முனிசிபாலிட்டி ஈத் அல் பித்ர் விடுமுறையின் போது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் செயல்படும் நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, துபாய் சஃபாரி பார்க் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும், முஷ்ரிப் தேசிய பூங்காவில் உள்ள மவுண்டைன் பைக் டிராக் காலை 6.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

அதுபோல, க்ரீக், மம்சார், ஜபீல், சஃபா மற்றும் முஷ்ரிப் தேசிய பூங்காக்கள் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். குரானிக் பூங்கா காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். மேலும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை துபாய் ஃபிரேம் அனைவரையும் வரவேற்கும்.

ஈத் அல் பித்ரின் போது நேரடி பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக துபாய் முனிசிபாலிட்டி துபாயில் மூன்று பொழுதுபோக்கு வசதிகளை நியமித்துள்ளது. அதன்படி, துபாய் ஃபிரேம் ஈத் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்க நிகழ்ச்சிகளை நடத்தும்.

மேலும், துபாய் சஃபாரி பார்க்கில் காலை 11 மணிக்கு ஆப்பிரிக்கன் வில்லேஜ், மதியம் 12.30 மணிக்கு எக்ஸ்ப்ளோரர்ஸ் வில்லேஜ், பிற்பகல் 2.30 மணிக்கு ஆசியன் வில்லேஜ் மற்றும் மாலை 3.30 மணிக்கு மெயின் எக்ஸிட்டிலும் நேரடி நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் குழந்தைகள் சிட்டியும் (Children’s City) ஈத் பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்.

உணவு பாதுகாப்பு சோதனை:

ஈத் பண்டிகையை முன்னிட்டு உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து எமிரேட்டில் உள்ள உணவகங்கள் உணவுப் பொருட்களை சேமித்தல், தயாரித்தல் ஆகியவற்றிற்கான விதிமுறைகளுக்கு உட்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த குடிமை அமைப்பு பல பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பண்டிகைக் காலங்களில் அதிகமாக விற்பனையை எட்டும் ஹைப்பர் மார்க்கெட்டுகள், இனிப்பு கடைகள், சாக்லேட் கடைகள் மற்றும் பிரபலமான மற்றும் அரபு இனிப்புகள் விற்கும் கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

இதற்கிடையில், துபாய் முனிசிபாலிட்டி குழுக்கள் புதிய உணவுப் பொருட்களின் பாதுகாப்பை ஆராய்வதற்காக விற்பனையகங்கள், நுகர்வோர் வளாகங்கள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்கள், மத்திய பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தை மற்றும் வாட்டர்ஃபிரண்ட் மார்க்கெட் ஆகியவற்றில் தொடர்ந்து சோதனையை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!