அமீரக செய்திகள்

துபாய்: ஏப்ரல் 14 முதல் பல்வேறு ஆன்லைன் ஸ்டோர்களில் 95 சதவீதம் வரை தள்ளுபடியுடன் நேரடி விற்பனை.!! மிஸ் பண்ணிடாதிங்க…

துபாயில் உள்ள பிரபலமான ஆன்லைன் ஸ்டோர்களில் வரவிருக்கும் மூன்று நாட்களுக்கு 95 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவிளான தள்ளுபடியுடன் துபாய் தனது முதல் சிறந்த ஆன்லைன் விற்பனையை இ-காமர்ஸ் தளங்களில் தொடங்கவுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 14 தொடங்கி ஏப்ரல் 16 வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரமலான் மற்றும் ஈத் பரிசுகளை ஆன்லைனில் பெருமளவு தள்ளுபடி விலையில் வாங்கலாம். மேலும், துபாயின் ரீடெயில் பெஸ்டிவல் காலண்டரில் (Retail Festival Calendar) துபாய் நகரம் முழுவதும் உள்ள இ-ஸ்டோர்களில் இந்த ஆன்லைன் ஷாப்பிங் தற்ளுபடிக்கான வாய்ப்புகளையும் குடியிருப்பாளர்கள் பெறலாம்.

ஆகவே, வாடிக்கையாளர்கள் www.greatonlinesale.com என்ற லிங்கை கிளிக் செய்து அனைத்து சலுகைகள் மற்றும் பங்குபெறும் பிராண்டுகளைக் கண்டறிவதுடன், கூடுதல் தள்ளுபடிகளுக்கான சிறப்பு ப்ரோமோ குறியீட்டையும் (exclusive promo code) பெறலாம். கூடுதலாக, 10,000 ரொக்கத்தைப் பெறும் மூன்று வெற்றியாளர்களில் ஒருவராகும் வாய்ப்பையும் குடியிருப்பாளர்கள் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துபாயின் இந்த கிரேட் ஆன்லைன் விற்பனையில் (Great Online Sale) பங்கேற்கும் சில பிரபலமான இ-ஸ்டோர்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களின் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அவை,

  1. Ounass
  2. Noon
  3. Azadea, 6th Street
  4. Mall Of The Emirates
  5. Mom Store
  6. The Red Carpet
  7. V Perfume, Carrefour
  8. Virgin Megastore
  9. Jumbo
  10. Lacoste
  11. Centrepoint
  12. Puma
  13. Namshi

மேற்கூறப்பட்டுள்ள இ- ஸ்டோர்கள் உட்பட மேலும் பல்வேறு ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த தள்ளுபடியை பெறலாம். இது குறித்து துபாய் பெஸ்டிவல்ஸ் மற்றும் ரீட்டெய்ல் விற்பனையகங்களின் (Dubai Festivals and Retail Establishment – DFRE) CEO அகமது அல் காஜா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக துபாயில் இ-காமர்ஸ் துறை கணிசமாக வளர்ந்துள்ளதாகவும், இந்த ஆன்லைன் விற்பனையானது சில்லறை விற்பனையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ரீடெயில் பெஸ்டிவல் கலண்டர் வரலாற்று ரீதியாக நேரடி ஸ்டார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது, அதேசமயம், சில்லறை விற்பனையாளர்களின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தை ஆதரிப்பது முக்கியமானது என்பதால், இந்த தள்ளுபடி நுகர்வோருக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் சிறந்த சலுகைகளைக் கண்டறியும் வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!