அமீரக செய்திகள்

துபாய்: வாகன ஓட்டிகள் கவனம்.. தவறுதலாக இந்த பாதையில் வாகனங்களை ஓட்டினாலும் 600 திர்ஹம் அபராதம்..!!

துபாயில் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கு என ஒதுக்கப்பட்ட பாதைகள் சில சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பாதையில் வாகன ஓட்டிகள் தவறுதலாக நுழைந்து விட்டால் கூட அதற்காக அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். துபாயின் RTA தெரிவிக்கையில் இந்த விதிமீறலுக்கு 600 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த விதிமீறல் புரிந்தவர்கள் RTA-விடமிருந்து 600 திர்ஹம்ஸ் அபராதத்திற்கான SMS-ஐயும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுப் போக்குவரத்து பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் பொருட்டு, துபாயில் ஆங்காங்கே சில சாலைகளில் இந்த பேருந்துப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகன ஓட்டிகள் தற்செயலாக பேருந்து பாதைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, பாதையின் இருபுறங்களிலும் சிவப்பு நிறக் கோடுகளும், ‘Bus Only’ என்ற ஒளிரும் ஒளி சமிக்ஞைகளும் இருக்கும். எனவே, இரவிலும் பாதைகளை எளிதாக அடையாளம் காணமுடியும். இந்த பாதைகள் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கு என ஒதுக்கப்பட்டிருந்தாலும், காவல்துறை, சிவில் டிஃபென்ஸ் டிரக்குகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசரகால வாகனங்களும் பயன்படுத்தப்படலாம்.

துபாயில் உள்ள முக்கிய பேருந்து பாதைகள்:

  1. நைஃப் ஸ்ட்ரீட் (1 கி.மீ)
  2. அல் இத்திஹாத் சாலை – அல் மம்சார் டோல் கேட் அருகில் (500 மீ)
  3. அல் மினா ஸ்ட்ரீட் (குவைத் ஸ்ட்ரீட்டில் இருந்து ஃபால்கன் ஜங்க்‌ஷன் வரை 1.7 கிமீ)
  4. அல் மன்கூல் ஸ்ட்ரீட் (அல் சத்வா ரவுண்டானாவிலிருந்து ஷேக் ரஷித் ஸ்ட்ரீட் வரை 1.8 கிமீ)
  5. அல் கலீஜ் ஸ்ட்ரீட்(கிரீக் ஸ்ட்ரீட்தில் இருந்து அல் முசல்லா ஸ்ட்ரீட் வரை 1.7 கிமீ)
  6. காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட் (அல் மினா ஸ்ட்ரீட் சந்திப்பிலிருந்து ஸ்ட்ரீட் 16 வரை 100 மீ)

அபராதம் செலுத்துவது எப்படி?

ஒரு வாகன ஓட்டி தற்செயலாக பிரத்யேக பேருந்து பாதையில் நுழைந்தால், அவர்களின் நம்பர் பிளேட் மற்றும் வாகன உரிமத்துடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் தெரிவிக்கப்படும். https://rta.ae/ என்ற லிங்க் மூலம் அல்லது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு கிடைக்கும்  ‘RTA Dubai’ மற்றும்  ‘Dubai Drive போன்ற RTA-யின் அதிகாரப்பூர்வ ஆப்ஸ் மூலம் அபராதத்தை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும், ‘Dubai Police’ ஆப் மூலமும் பஸ் லேன் அபராதத்தை செலுத்தலாம்.

  1. உங்களது அபராதத்தை செலுத்த முதலில் https://www.rta.ae/wps/portal/rta/ae/home/rta-services/service-details?serviceId=97914952 என்ற லிங்க் உள்ளே நுழைந்து ‘Apply Now’ மற்றும் ‘Start’ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  2. அடுத்து பின்வரும் தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அபராத எண்(Fine number)
  • பிளேட் எண் (Plate number)
  • லைசன்ஸ் எண் (Licence number)
  • ட்ராபிக் பைல் எண் (Traffic file number)

3. அதன்பிறகு, நீங்கள் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில், RTA இணையதளம் ஏதேனும் அபராதங்களைத் தேடி உங்களுக்கு சமர்ப்பிக்கும், நீங்கள் அபராதத்தைப் பார்த்து ‘confirm’ என்பதைக் கிளிக் செய்யவும்.

4.  கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பஸ் அபராதத்தை ஆன்லைனில் செலுத்துங்கள். கூடுதல்லாக்,  அபராதம் செலுத்துவதற்கான செலவில் மீறல் கட்டணம் மற்றும் knowledge fee 20 திர்ஹம் ஆகியவை அடங்கும்.

‘Dubai Police’ ஆப் மூலம் அபராதத்தை செலுத்துவது எப்படி?

  1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ios ஆப் ஸ்டோர் மூலம் ‘Dubai Police’ ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.
  2. அதன் பிகு, ‘Services’ என்பதை கிளிக் செய்து, ‘Traffic Services’ என்ற வகையின் கீழ் ‘Fine Inquiry and Payment’ என்பதைத் தட்டவும்.
  3. ‘Ticket Number’ என்ற தேர்வில்  ‘Bus Lane Fines’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. அடுத்து, உங்கள் மொபைல் எண்ணில் SMS மூலம் நீங்கள் பெற்றிருக்கும் டிக்கெட் எண் விவரங்களை உள்ளிட்டு  ‘fine year’ மற்றும் ‘ticket no’ ஆகியவற்றை உள்ளிடவும்.
  5.  இறுதியாக, உங்களது அபராதத்தைச் சரிபார்த்து, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தவும் முடியும்.

விதிக்கப்பட்ட பேருந்து அபராதத்தை எவ்வாறு மறுப்பது?

RTA இன் படி, ஒரு வாகன ஓட்டியிடம் தனக்கு விதிக்கப்பட்ட பேருந்து அபராதத்தை மறுக்க போதுமான ஆதாரம் இருந்தால், அவர்கள் ஆன்லைனில் இது குறித்த புகார் அளிக்கலாம். அபராதத்தை மறுப்பதற்கு, அபராதம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தனிநபர் விசாரணையை சமர்ப்பிக்கலாம். அதுபோல, சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு SMS மூலம் விண்ணப்ப நிலை தெரிவிக்கப்படும். எனவே, நீங்கள் பின்வரும் படிகளைப் பின்பற்றலாம்:

1. https://www.rta.ae/wps/portal/rta/ae/dispute-form?lang=en2 என்ற லிங்க்கை கிளிக் செய்து, அபராதம் குறித்த விவரங்களை உள்ளிடவும்:

  • கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ‘பஸ் லேன்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் முழுப்பெயர் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • அபராதம் எண் மற்றும் அபராதத்திற்கான வெளியீட்டு தேதியை உள்ளிடவும்.

2. பின்வருமாறு தேவையான ஆவணங்களை இணைக்கவும்:

  • எமிரேட்ஸ் ஐடியின் நகல்.
  • ஓட்டுநர் உரிமத்தின் நகல்.
  • வாகனத்தின் உரிமையின் நகல்.
  • பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு விசாவின் நகல்.
  • வழக்கை ஆதரிப்பதற்கு வேறு ஏதேனும் துணை ஆவணங்கள்.(ஆவணங்கள் PDF வடிவத்தில் இருக்க வேண்டும்)

 

Related Articles

Back to top button
error: Content is protected !!