அமீரக செய்திகள்

ஈத் விடுமுறை: துபாய் மெட்ரோ, டிராம், பேருந்து செயல்படும் நேரங்களை வெளியிட்டுள்ள RTA !!

அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் குடியிருப்பாளர்களுக்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பில், ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் பேருந்துகள் செயல்படும் நேரங்களை RTA அறிவித்துள்ளது.

ஏப்ரல் 20 முதல் விடுமுறை தொடங்குவதால், மெட்ரோ ரெட் மற்றும் கிரீன் லைன் நிலையங்கள் வியாழன் முதல் சனிக்கிழமை வரை, காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, துபாய் டிராம் வியாழன் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் 1 மணி வரையும், ஞாயிறு காலை 9 மணி முதல் 1 மணி வரையும் இயக்கப்படும். மேலும், காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை துபாய் முழுவதும் உள்ள பொது பேருந்து நிலையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது வாகன சோதனை மையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஷவ்வால் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தொழில்நுட்ப ஆய்வுக்கான வாகன சோதனை சேவை மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஈத் விடுமுறையின் போது வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் (Customer happiness centre) செயல்படாது. ஆனால், உம் ரமூல், தேரா, அல் பர்ஷா, அல் மனாரா, அல் கிஃபாஃப் மற்றும் RTA இன் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள ஸ்மார்ட் மையங்கள் 24 மணி நேரமும் வழக்கம் போல் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!