அமீரக செய்திகள்

UAE: பாதசாரிகளுக்கான பாதையில் வழிவிடாத வாகன ஓட்டிகளை கண்டறிய புதிய ரேடார்..!! மீறுபவர்களுக்கு கடும் அபராதம்…!!

அமீரகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 3 திங்கட்கிழமை முதல் சாலைகளில் பாதசாரிகள் கடந்து செல்லும் பகுதிகளில் நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், விதிகளை மீறுபவர்களை கண்டறியவும் சூரிய சக்தியில் இயங்கும், தானாகவே கட்டுப்படுத்தப்படும் புதிய ரேடார்கள் செயல்படுத்தப்படும் என்று உம் அல் குவைன் காவல்துறை தெரிவித்துள்ளது.

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிலர், பாதசாரிகள் கடக்கும் பகுதியில் நிற்காமல் வாகனத்தைச் செலுத்துவதால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் சேதங்களையும் குறைக்கும் வகையில், ரேடார்கள் செயல்படுவதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்ட உள்துறை அமைச்சகத்தின் முயற்சியைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம், வாகன ஓட்டிகள் சாலைகளின் குறுக்கே பாதசாரிகளுக்கான பிரத்யேக பாதையை பாதசாரிகள் கடக்கும்போது அவர்களுக்கு வாகன ஓட்டிகள் வழிவிட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளின்படி, பாதசாரிகளுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயிண்டுகள் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விதிமீறல்களைக் கண்காணிக்க, அபுதாபியில் உள்ள சாலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ரேடார்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!