ADVERTISEMENT

55 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்பனையான நம்பர் பிளேட்..!! புதிய சாதனையை படைத்த துபாய்…!!

Published: 11 Apr 2023, 10:51 AM |
Updated: 11 Apr 2023, 11:06 AM |
Posted By: Menaka

துபாயில் சனிக்கிழமையன்று இரவு நடைபெற்ற ‘Most Noble Numbers’ ஏலத்தில் வாகனத்தின் நம்பர் பிளேட் P7 சுமார் 55 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. ஜூமேராவில் உள்ள Four Seasons ரிசார்ட்டில் கடும் போட்டியுடன் இந்த நம்பர் பிளேட் ஏலம் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்பு சுமார் 16 ஆண்டுகளுக்கு முன், அபுதாபியில் ஒரு நம்பர் பிளேட் 52.5 மில்லியனுக்கு ஏலத்தில் விற்பனையாகி உலக சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், தற்போது 55 மில்லியன் திர்ஹம்ஸிற்கு நம்பர் பிளேட் விற்பனை செய்யப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுளேது.

இது போல ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக விலைக்கு விற்பனையான நம்பர் பிளேட்டுகளின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT
  • P7 – 55 மில்லியன் திர்ஹம்களுக்கு துபாயில் விற்பனையாகியுள்ளது.
  • அபுதாபி ; 2008 இல் 52.2 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்கப்பட்டது
  • AA9 – 2021 இல் 38 மில்லியன் திர்ஹம்களுக்கு துபாயில் விற்கப்பட்டது
  • AA8- 2022 ல் 35 மில்லியன் திர்ஹம்களுக்கு துபாயில் விற்கப்பட்டது
  • D5 – 2016 இல் 33 மில்லியன் திர்ஹம்களுக்கு துபாயில் விற்கப்பட்டது

நம்பர் பிளேட்டின் ஆரம்ப விலை 15 மில்லியன் திர்ஹம் ஏலத்தில் தொடங்கி, சில நொடிகளில் ஏலம் 30 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பிரபல டெலிகிராம் செயலியை நிறுவிய பிரெஞ்சு-எமிராட்டி தொழிலதிபர் பாவெல் வலேரிவிச் துரோவ் என்பவர், 35 மில்லியனுக்கு எடுத்த ஏலம் பல நிமிடங்களுக்கு நீடித்திருந்தாலும், மேலும் பல்வேறு தரப்பிலிருந்து ஏலம் வரத் தொடங்கியதால் ஏலம் சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையில், ஒவ்வொரு தரப்பிலிருந்தும் ஏலம் விடப்பட்டபோதும் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். மேலும், நம்பர் பிளேட்டுக்கான ஏலத்தின் விலை 55 மில்லியன் திர்ஹம்களை அடையும் வரை விறுவிறுவென உயர்ந்துள்ளது. இறுதியாக, ஏலம் முடிந்ததும் வெற்றி பெற்ற ஏலதாரரை சுற்றி கூட்டம் கூடியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் வித்தியாசமான மற்றும் சிறப்பான நம்பர் பிளேட் மற்றும் தொலைபேசி எண்களுக்கான “Most Noble Numbers” அறக்கட்டளையின் ஏலம்  “1 பில்லியன் மீல்ஸ்” பிரச்சாரத்திற்கு ஆதரவாக துபாயில் சனிக்கிழமை அன்று (ஏப்ரல் 8) நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.