வளைகுடா செய்திகள்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஒரே மாதத்தில் கையாண்ட மஸ்கட் சர்வதேச விமான நிலையம்…!! இந்திய பயணிகள் முதலிடம்…!!

இந்த ஆண்டு மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக ஓமானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் (NCSI) ஞாயிற்றுக்கிழமை அன்று  புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, ஜனவரி 2023இல் மஸ்கட் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தின் வழியாக உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்கள் 143 சதவீதம் உயர்ந்து 7,687 விமானங்களை எட்டியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Covid-19 தொற்றுநோய் பரவலுக்கு முன்பு ஜனவரி 2020 இறுதியில் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 1.43 மில்லியனாக இருந்தது. இது தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில் ஓமான் பதிவு செய்ததைப் போன்றது என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் NCSI வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின் படி, ஜனவரி 2023 இன் இறுதியில் மஸ்கட் சர்வதேச விமான நிலையம் மற்றும் சலாலா, சோஹார் மற்றும் துக்ம் விமான நிலையங்கள் வழியாக உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 8,537 விமானங்களை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, ஜனவரி 2023 இன் இறுதியில் மஸ்கட், சலாலா, சோஹார் மற்றும் துக்ம் ஆகிய விமான நிலையங்கள் வழியாக வந்த, புறப்படும் மற்றும் டிரான்ஸிட் பயணிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,165,556 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் ஓமான் விமான நிலையங்கள் வழியாக வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2023 ஜனவரி இறுதியில் 115 சதவிகிதம் உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையில் 43.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக சலாலா விமான நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, சுமார் 105,719 பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த விமான நிலையத்தில் செயல்படும் விமானங்களின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து சோஹார் விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்களின் எண்ணிக்கை ஜனவரி 2023 இன் இறுதியில் 24 விமானங்களாக பதிவாகியுள்ளது. இவை 2,380 பயணிகளை ஏற்றிச் செல்வதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் துக்ம் விமான நிலையம் 52 உள்நாட்டு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்களில் 6,067 பயணிகளை ஏற்றிச் சென்றதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மொத்தம் 151,087 என்ற பயணிகளின் எண்ணிக்கையுடன் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தை கடந்து சென்றவர்களின் பட்டியலில் இந்திய பயணிகள் முதலிடத்திலும், மொத்தம் 52,016 பயணிகளுடன் பங்களாதேஷ் பயணிகள் மற்றும் 39,762 பயணிகளுடன் பாகிஸ்தான் நாட்டினர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!