வளைகுடா செய்திகள்

காலாண்டு இகாமா கட்டணம் வீட்டு தொழிலாளர்களுக்கு பொருந்தாது என அறிவிப்பு!! சவுதி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்…

சவுதி அரேபியாவில் வீட்டுத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை அனுமதி அல்லது இகாமா வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான கட்டணத்தை காலாண்டுக்கு ஒருமுறை செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை பொருந்தாது என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெசிடென்சி அனுமதிக்கான கட்டணத்தை காலாண்டு அடிப்படையில் பிரிப்பது வீட்டுப் பணியாளர்களுக்குக் கிடையாது மற்றும் ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டும் என்று சவூதி அரசின் அதிகாரப்பூர்வ தளமான அப்ஷர் கூறியுள்ளது.

அதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்களைக் கொண்ட சவூதி அரேபியா 2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டினருக்கான தொழிலாளர் உரிமங்களுடன் இணைக்கப்பட்ட காலாண்டு ரெசிடென்ஸ் அனுமதிகளை வழங்க அனுமதித்துள்ளது. மேலும், சவுதி அரேபிய பாஸ்போர்ட்டுகளுக்கான பொது இயக்குநரகம் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு அத்தகைய அனுமதிகளை வழங்குவதையும் புதுப்பிப்பதையும் அறிவிதத்துடன் குடியுரிமை மற்றும் தொழிலாளர் அனுமதிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை பிரிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.

அப்ஷர் வழியாக இகாமாவைப் புதுப்பிக்க வேண்டுமெனில் பயனர்கள் செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களை நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. மேலும் அவர்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் மற்றும் வேலைக்குச் செல்லாதவராக பதிவு செய்திருக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உள்ளன.

சவூதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகையான 34.8 மில்லியன் மக்களில் 10.5 மில்லியன் வெளிநாட்டினர் உள்ள நிலையில், சவூதி அரேபியாவில் தொழிலாளர் உரிமங்கள் வெளிநாட்டினருக்கு சட்ட ரீதியான தொழிலாளர்களாகவும் குடியிருப்பாளர்களாகவும் இருக்க அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சவூதியில் வீட்டுப்பணியாளர்கள் என்ற வகையில், ஓட்டுநர்கள், வீட்டுப் பணிப்பெண்கள், துப்புரவுப் பணியாளர்கள், சமையல்காரர்கள், காவலர்கள், விவசாயிகள், தையல்காரர்கள், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர்.

2020 ஆம் ஆண்டின் இறுதியில், சவுதி அரேபியா நாட்டின் ஸ்பான்சர்ஷிப் முறையை கடுமையாக மறுசீரமைத்து தொழிலாளர் சீர்திருத்தங்களை வெளியிட்டது. அடுத்தபடியாக மார்ச் 2021 இல் நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்களால் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த சீர்திருத்தங்கள், தொழிலாளர் முதலாளியின் அனுமதியின்றி வேலை ஒப்பந்தம் காலாவதியாகும் போது முதலாளிகளை மாற்றுவதற்கு பணியாளர் இயக்கம் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!