அமீரக செய்திகள்

துபாய் எமிரேட்டிற்கு புதிய ஆட்சியாளர்கள் நியமனம்.. ஆனணயை வெளியிட்ட துபாய் மன்னர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், ஷேக் மக்தூம் பின் முகமது மற்றும் ஷேக் அகமது பின் முகமது ஆகியோரை முறையே அமீரகத்தின் முதல் மற்றும் இரண்டாவது துணை ஆட்சியாளர்களாக அறிவித்து ஆணையை வெளியிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு முதல், ஷேக் மக்தூம் துபாயின் துணை ஆட்சியாளராக பதவி வகித்து வருகிறார், மேலும், அமீரகத்தின் நிதி அமைச்சராக இருந்த மறைந்த ஷேக் ஹம்தான் பின் ரஷித் அல் மக்தூமுடன் மார்ச் 2021 இல் பணியாற்றியுள்ளார். அதே ஆண்டில், அக்டோபர் 12 முதல் மத்திய வரி ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் பதிவிக்கும் வந்தார்.

அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி அமைச்சராகவும், எமிரேட் நிர்வாகக் குழுவின் முதல் துணைத் தலைவராகவும் உள்ள ஷேக் மக்தூம் துபாயில் பல முக்கிய பதவிகள் மற்றும் பொறுப்புகளில் உள்ளார்.

அடுத்து இரண்டாவது துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷேக் அகமது தற்போது துபாய் மீடியா கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு ஆர்வலரான இவர் அமீரக தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். அதுபோல, கடந்த ஆண்டு அவர் பால்கன்ரி விளையாட்டு மற்றும் பந்தயத்திற்கான சர்வதேச கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த புதிய ஆணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!