ADVERTISEMENT

UAE: பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்த அபுதாபி ஒப்புதல்!! பள்ளிகளின் தர மதிப்பீட்டின் அடிப்படையில் கட்டணம் உயரும் என தகவல்…

Published: 12 Apr 2023, 7:48 PM |
Updated: 12 Apr 2023, 8:02 PM |
Posted By: Menaka

அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை (Abu Dhabi Department of Education and Knowledge – ADEK) 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனங்களின் விருப்பப்படி உயர்த்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பை அறிவித்துள்ளது மற்றும் கல்விச் செலவுக் குறியீட்டின் (Educational Cost Index – ECI) முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் ‘Outstanding’ என்று தரவரிசைப் பெற்ற பள்ளிகள், புதிய கல்வியாண்டில் அதிகபட்சமாக 3.94 சதவீதமாக கட்டணத்தை உயர்த்துவதற்கான அனுமதி உள்ளது என்றும், அதே சமயம் ‘Very good’ என்ற மதிப்பீட்டைப் பெற்ற பள்ளிகள் 3.38 சதவீதத்துக்கு கட்டணத்தை உயர்த்த தகுதி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுபோல, ‘Good’ என்ற மதிப்பீடு பெறும் பள்ளிகள் 2.81 சதவீத உயர்வையும், ‘Acceptable’, ‘Weak’ மற்றும் ‘Very weak’ என்று மதிப்பிடப்பட்ட பள்ளிகள் 2.25 சதவீத உயர்வையும் செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய Irtiqaa ஆய்வு முடிவுகளின்படி, 11 பள்ளிகள் ‘Outstanding’, 37 ‘Very good’, 85 ‘Good’, 63 ‘Acceptable’ மற்றும் 1 ‘Weak’ என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, நிலையான கல்விக் கட்டண உயர்வுக்குத் தகுதிபெற, பள்ளி குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இயங்கி, அங்கீகரிக்கப்பட்ட திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT