அமீரக செய்திகள்

அமீரகத்தில் புழக்கத்திற்கு வரவுள்ள புத்தம்புதிய 1,000 திர்ஹம் நோட்டுகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியானது (Central Bank of the UAE -CBUAE) பாலிமரால் செய்யப்பட்ட புதிய 1,000 திர்ஹம் நோட்டை புழக்கத்திற்காக வெளியிட்டுள்ளது. புதிய திர்ஹம் நோட்டுகள் எதிர்வரும் ஏப்ரல் 10, 2023 முதல் வங்கிகள் மற்றும் பரிவர்த்தனை மையங்களில் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

புதிய திர்ஹம் நோட்டில் அமீரகத்தின் உலகளாவிய சாதனைகளை பிரதிபலிக்கும் கலாச்சார மற்றும் வளர்ச்சி சின்னங்களுடன் படங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னோக்கு பார்வை மற்றும் இலக்குகளைக் குறிக்கும் வடிவமைப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

புதிய பண நோட்டின் முன் பக்கம் மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் உருவம், 1974 இல் நாசா முன்னோடிகளுடன் அவர் சந்தித்ததன் மூலம் ஈர்க்கப்பட்ட ஒரு விண்வெளி விண்கலத்தின் மாதிரிக்கு அருகில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்புறம் நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதிலும், கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அபுதாபியில் உள்ள பராக்கா அணுசக்தி ஆலையின் படம் இடம் பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திர்ஹம் நோட்டுகள், தற்போது புழக்கத்தில் உள்ள அதே மதிப்பிலான திர்ஹம் நோட்டின் நிறங்களைப் பாதுகாக்கும் வகையில் வெவ்வேறு பழுப்பு நிற நிழல்களைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதுபோல, மேம்பட்ட இன்டாக்லியோ அச்சிடும் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் கல்வெட்டுகளுடன் தனித்துவமான அழகியல் சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!