அமீரக செய்திகள்

UAE: வீட்டுத் தொழிலாளரை WPS உடன் பதிவு செய்யாத முதாலளிகளுக்கு அபராதம்!! ஏப்ரல் முதல் அமல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு வீட்டுத் தொழிலாளரை வேலைக்கு நியமித்திருந்தால், மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் (MOHRE) அங்கீகரிக்கப்பட்ட ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS – Wage Protection System) மூலம் அவர்களுக்கு மாதச் சம்பளத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. WPS என்பது ஒரு சம்பள பரிமாற்ற அமைப்பு ஆகும், இது வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முதலாளிகள் மற்றும் நிறுவனங்களை அனுமதிக்கும்.

வீட்டு தொழிலாளருக்கு ஊதிய பாதுகாப்பு அமைப்பில் சம்பளத்தை வழங்குவது பின்வரும் நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்று அமைச்சகம் கூறியுள்ளது:

  • முதலாளியிடமிருந்து வீட்டுப் பணியாளருக்கு ஊதியத்தை வழங்கும் செயல்முறையை முறைப்படுத்துதல்.
  • சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்தல்.
  • ஊதியம் வழங்கும் செயல்முறையை நிரூபிக்கும் முதலாளியின் உரிமையைப் பராமரித்தல்.
  • இருதரப்பினருக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்துதல்.

WPS இல் வீட்டுப் பணியாளர்களைப் பதிவு செய்வதற்கான சேவை 19 தொழில்களுக்குக் கிடைக்கிறது, ஆனால் ஏப்ரல் 1, 2023 முதல், இந்தச் சேவை பின்வரும் ஐந்து தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அவை

  1. தனிப்பட்ட ஆசிரியர்
  2. தனியார் வேளாண் பொறியாளர்
  3. PRO (மக்கள் தொடர்பு அதிகாரி)
  4. தனிப்பட்ட பயிற்சியாளர்
  5. வீட்டு பராமரிப்புப் பணியாளர் (Home care provider)

மேலும்,  WPS இல் பணியாளரை பதிவு செய்யாமல் இருந்தால், நிர்வாக அபராதங்களை முதலாளிகளின் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சகம் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!