அமீரக செய்திகள்

துபாயின் பொதுத் துறையில் காலிப்பணியிடங்களில் ஆட்சேர்ப்பு!! வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தகவல்…!!

உலகளவில் பெரும்பாலும் அரசாங்க வேலைகளையே அதிகமானோர் விரும்புகின்றனர். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் வேறுபட்டதல்ல. துபாயில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் அகாடமிக் ஹெல்த் கார்ப்பரேஷன் போன்ற பல அரசு நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அந்த இடங்களை தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நிரப்ப உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களில் தேர்வு செய்யப்படும் பதவியின் தன்மையைப் பொறுத்து 10,000 திர்ஹம் முதல் 50,000 திர்ஹம் வரை ஊழியருக்கு சம்பளம் வழங்கப்படும் என்று நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும், ஆர்வம் மற்றும் தகுதியுள்ள அமீரக குடிமக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு போர்டல் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் துபாயின் பொதுத் துறை நிறுவனங்களால் வெளியிடப்பட்ட முழுநேர வேலைகளின் பட்டியல் மற்றும் வேலைக்கான தகுதி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை: ஹெபடோபிலியரிக்கான ஆலோசகர்-பொது அறுவை சிகிச்சை (துபாய் மருத்துவமனை)
துறை: துபாய் அகாடமிக் ஹெல்த் கார்ப்பரேஷன்
ஊதியம்: 40,000 முதல் 50,000 திர்ஹம் வரை.
தகுதி: அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பள்ளியில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்/பெல்லோஷிப்/போர்டு அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு
ரேடியோகிராபர்
நிறுவனம்: துபாய் அகாடமிக் ஹெல்த் கார்ப்பரேஷன்
ஊதியம்: 10,000 திர்ஹம்களுக்கும் குறைவானது
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ரேடியோகிராஃபியில் இளங்கலை பட்டம்/உயர் டிப்ளமோ
மல்டிமீடியா நிபுணர்
நிறுவனம்: முகமது பின் ரஷித் அரசு பள்ளி
ஊதியம்: 10,000 முதல் 20,000 திர்ஹம் வரை.
தகுதி: திரைப்பட ஆய்வுகள், ஒளிப்பதிவு, மல்டிமீடியா, டிஜிட்டல் தயாரிப்பு அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம். அத்துடன் தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது கூடுதலாக இருக்கும்.
அறிவுறுத்தல் வடிவமைப்பாளர் (Instructional Designer)
நிறுவனம்: முகமது பின் ரஷித் அரசு பள்ளி
ஊதியம்: 10,000 திர்ஹம் முதல் 20,000 திர்ஹமா வரை
தகுதி: கல்வி, அறிவுறுத்தல் வடிவமைப்பு, கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம். முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு. மேலும், பயிற்சி வடிவமைப்பில் 5 வருட அனுபவம். அதிலும்  உயர் கல்வி சூழலில் அனுபவம் பெற்றிருந்தால் நல்லது.
தலைமை அமைப்புகள் அதிகாரி (Chief Systems Officer)
துறை: நிதித் துறை
தகுதி: இளங்கலை பட்டத்துடன் எட்டு வருட அனுபவம் அல்லது அதற்கு சமமான அல்லது தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டத்துடன் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தலைமை வணிக தொடர்ச்சி நிபுணர் (Chief Business Continuity Specialist)
துறை: நிதித் துறை
தகுதி: இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான 16 ஆண்டு அனுபவம் அல்லது முதுகலை பட்டத்திற்கான எட்டு வருட அனுபவம்; இதே போன்ற துறைகளில் முனைவர் பட்டம் பெற ஆறு ஆண்டுகள்
சீனியர் IT ஆடிட்டர்
துறை: நிதி தணிக்கை ஆணையம்
தகுதி: கணினி அறிவியலில் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் அவசியம்.
நிதி தணிக்கையாளர் (Financial Auditor)
நிறுவனம்: நிதி தணிக்கை ஆணையம்
தேவை: கணக்கியல்/நிதித்துறையில் இளங்கலை பட்டம்
தலைமை நிபுணர் – நிறுவன கட்டிடக்கலை
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தகுதி: ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஜினியரிங், புரோகிராம் மேனேஜ்மென்ட் புரொபஷனல் (பிஜிஎம்பி) ஆகியவற்றில் முதுகலை பட்டம்
மருத்துவ உணவியல் நிபுணர் (ரஷித் மருத்துவமனை)
நிறுவனம்: துபாய் அகாடமிக் ஹெல்த் கார்ப்பரேஷன்
தேவை: இளங்கலை பட்டம்
உடற்பயிற்சி மேற்பார்வையாளர்
நிறுவனம்: துபாய் பெண்கள் நிறுவனம் (Dubai Women Establishment)
தகுதி: உயர் டிப்ளமோ
துபாய் லைசன்ஸ் எக்ஸ்பெர்ட்:
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டதுடன் 13-15 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம்
தலைமைப் பொறியாளர் – நகர்ப்புற திட்டமிடல்
துறை: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தகுதி: கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங்
சீனியர் என்ஜினியர் – கார்ப்பரேட் பாதுகாப்பு
துறை: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டமும்  3-7 ஆண்டுகள் பணி அனுபவமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சீனியர் இன்டெர்னல் ஆடிட்டர் – சிறப்பு தணிக்கை
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தேவை: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து நிதி, கணக்கியல்/IT ஆகியவற்றில் இளங்கலை பட்டத்துடன் முன்னுரிமை மோசடி விசாரணை/தேர்வு மற்றும் உள் தணிக்கை துறையில் 5 வருட பணி அனுபவம் பெற்றவர்கள்
திட்ட மேலாளர் – செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தேவை: கணினி அறிவியலில் இளங்கலை அல்லதுPMP சமமான பட்டம் மற்றும் முதுகலை விரும்பத்தக்கது; 8 வருட பணி அனுபவம்.
சீனியர் இன்டெர்னல் ஆடிட்டர் – செயல்பாடுகள் & பெருநிறுவன ஆதரவு தணிக்கை
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணக்கியல்/நிதி/வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம்
சீனியர் எக்ஸ்பெர்ட் – தரம், சுகாதாரம், பாதுகாப்பு & நிலைத்தன்மை அலுவலகம்
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தேவை: இளங்கலை பட்டம்
தலைமை நிபுணர் – தரவு மேலாண்மை
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தேவை: தரவு அறிவியல்/ கணினி அறிவியல்/ புள்ளியியல்/ கணிதம்/ ஆராய்ச்சியில் முதுகலை; ஹடூப் மற்றும் பிக் டேட்டா மேனேஜ்மென்ட் (Hadoop and Big Data) டெக்னாலஜிகளுடன் ஹேண்ட்-ஆன் அனுபவம் விரும்பத்தக்கது.
தலைமை நிபுணர் – சேவைகள் உத்தரவாதம் மற்றும் மேம்பாடு
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
தேவை: வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் அல்லது நன்கு அறியப்பட்ட பல்கலைக்கழகத்தில் தரம்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தேவையான தகுதியும் ஆர்வமும் உடையவர்களாக இருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!