ADVERTISEMENT

அமீரகத்தில் பொதுத்துறை ஊழியர்களுக்கான ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!! எத்தனை நாட்களுக்கு விடுமுறை நீடிக்கும்?

Published: 13 Apr 2023, 1:43 PM |
Updated: 13 Apr 2023, 2:16 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் பொதுத் துறை மனிதவளங்களுக்கான ஃபெடரல் ஆணையத்தின் (Federal Authority for Government Human Resources – FAHR) படி, ஈத் அல் ஃபித்ர் விடுமுறையானது ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில், ஏப்ரல் 20 தொடங்கி ஏப்ரல் 23 வரை விடுமுறை நாட்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த நாளான ஏப்ரல் 24 முதல் வேலை நேரம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த தேதிகள் பிறை பார்ப்பதை பொறுத்தே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் ஏப்ரல் 21 அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச வானியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ரை உறுதிப் படுத்த பிறை பார்க்கும் குழு ரமலான் 29 அன்று இரவு கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விடுமுறை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?

பிறை பார்ப்பதன் அடிப்படையில் இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் அமீரகத்தில் அதிகாரப்பூர்வ ஈத் அல் ஃபித்ர் விடுமுறை ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏப்ரல் 20 அன்று பிறை தென்பட்டால், ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 23 வரை விடுமுறை வழங்கப்படும். ஒரு வேளை, அன்றிரவு பிறை தென்படவில்லையென்றால், குடியிருப்பாளர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். அதாவது, ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 24 வரை விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT