அமீரக செய்திகள்

UAE: பிசியாகும் விமான நிலையங்கள்.. கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணத்தை அனுபவிக்க இந்த டிப்ஸ் அவசியம்….

ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிலையங்கள் அடுத்த சில நாட்களில் அதன் பயணிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பைக் காணும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த சமயங்களில் அபுதாபி விமான நிலையத்தின் வழியாக அரை மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் கடந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 57 நாடுகளில் உள்ள 105 இடங்களுக்கு 2,800 க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோலவே, துபாயின் முதன்மை கேரியர் எமிரேட்ஸ் ஈத் அல் பித்ரின் போது 110,000 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அதிகப் பயணிகளின் நெரிசலைக் கருத்தில் கொண்டு சில பயணக் குறிப்புகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

— முதலில் நீங்கள் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, ஆன்லைன் செக்-இன் வசதிகளைப் பயன்படுத்தலாம்.

— உங்கள் விமான நிறுவனத்தின் இணையதளத்திற்குள் நுழைந்து அதில் உள்ள தகவலைப் பார்க்கவும் அல்லது உங்கள் டிராவல் ஏஜெண்டைச் சரிபார்க்கவும் அல்லது நிகழ்நேர அறிவிப்புகளைப் பெற விமான கண்காணிப்பு பயன்பாட்டைப் (flight tracking app) பயன்படுத்தவும்.

— அதுபோல, நீங்கள் விமான நிலையத்திற்கு எவ்வளவு சீக்கிரம் வர வேண்டும் என்று தெரியவில்லை எனில், இது குறித்த தகவலைப் பெற உங்கள் விமான நிறுவனம் அல்லது விமான நிலையத்தின் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

— குறிப்பாக, சர்வதேச விமானங்களுக்கு விமான நிலையத்திற்கு குறைந்தது 3-4 மணிநேரம் முன்னதாக வந்து சேருவது நல்லது.

— உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், நீங்கள் சேருமிடம் தொடர்பான ஏதேனும் அப்டேட் அல்லது பயண ஆலோசனைகளைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

— நம்பகமான டிராவல் ஏஜென்சி மூலம் உங்கள் பயணத்தை முன்பதிவு செய்யுங்கள். கூடுதல் பாதுகாப்புக்காக, பயணக் காப்பீட்டை வாங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

—  நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள், பயணத்தின் போது போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும், மேலும் அவசர காலங்களில் சில கூடுதல் மருந்துகளும் உங்களிடம் இருப்பது நலம். கூடவே, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வலி, இருமல் போன்ற  திடீர் சிரமங்களுக்கான சில அடிப்படை மருந்துகளையும், அடிப்படை முதலுதவி பெட்டியையும் எடுத்துச் செல்லுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!