அமீரக செய்திகள்

கோல்டன் விசா விண்ணப்பதாரர்களுக்கான நுழைவு அனுமதி கட்டணம் உயர்வு..!! வெளியான புது அப்டேட்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டு கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கான நுழைவு அனுமதி கட்டணத்தை அதிகாரிகள் அப்டேட் செய்துள்ளனர். அதன்படி, அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) ஆறு மாத நுழைவு அனுமதிக்கான கட்டணத்தை 1,250 திர்ஹம்களாக மாற்றியமைத்துள்ளது.

அதாவது, வழங்கல் கட்டணமாக (issuance fees) 1,000 திர்ஹம்களும், விண்ணப்பக் கட்டணமாக 100 திர்ஹம்களும், ஸ்மார்ட் சேவைகளுக்கு 100 திர்ஹம்களும் மற்றும் இ-சேவைகளுக்கு 28 திர்ஹம்களும் வசூலிக்கப்படுவதுடன் ICP க்கு 22 திர்ஹம்களும் கட்டணத்தில் அடங்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கோல்டன் விசா விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட், தகுதிச் சான்று மற்றும் கலர் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும், அமீரக கோல்டன் விசாவானது, திறமையானவர்கள், தகுதியான முதலீட்டாளர்கள், நிபுணர்கள், சிறந்த உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகள், அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் மற்றும் திரையுலகின் பிரபல நடிகர்கள் போன்றோருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் விசா வழங்குவதற்கான விசா வழங்குவதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து ICP சேவைகளுக்கான கட்டணங்களும் 100 திர்ஹம்களாக உயர்ந்துள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!