அமீரக செய்திகள்

UAE: திடீரென பாதை மாறி ஓட்டியதால் டிரக்குடன் மோதிய வாகனம்..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

அபுதாபி காவல்துறை, வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்லும்போது, வாகனங்களை எந்தவித சமிக்ஞைகளும் இன்றி திடீரென திருப்பும் போது ஏற்படும் ஆபத்துக்களை எடுத்துக்காட்டும் வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. அதில் முதல் டிராக்கில் சென்று கொண்டிருந்த வாகனம் இரண்டாவது டிராக் மாறி பின் உடனடியாக நான்காவது டிராக்கில் மாறியதன் விளைவாக அந்த டிராக்கில் வந்து கொண்டிருந்த டிரக்குடன் மோதி கடும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனவே, சாலைகளில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் பாதைகளை மாற்ற வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சாலைகளில் மற்ற வாகனங்களை தவறான முறையில் முந்திச் செல்வது, பாதைகளை திடீரென மாற்றுவது போன்றவற்றைத் தவிர்க்குமாறு அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் (Traffic and Patrols Directorate of Abu Dhabi Police) வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வேறொரு பாதைக்கு செல்லும் முன், சரியான பாதையில் இருப்பதை உறுதிசெய்யுமாறும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதையை மாற்றும்போது குறிகாட்டிகளைப் (indicators) பயன்படுத்தவும், திடீர் விலகலைத் தவிர்க்கவும், வேறு சாலையில் செல்லும்போது சரியான பாதையைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும் ரோந்துப்படை வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு இடுகையை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!