ADVERTISEMENT

ஈத் அல் ஃபித்ரின் போது ஜனாதிபதி எடுத்த புகைப்படம்..!! சமூக ஊடகங்களில் வைரல்…!!

Published: 24 Apr 2023, 5:26 PM |
Updated: 24 Apr 2023, 5:37 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், ஈத் அல் ஃபித்ரின் போது எடுத்த அவரது குடும்பப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், ஜனாதிபதி தனது அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தின் மூலம் தனது ஈத் கொண்டாட்ட உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் புகைப்படத்திற்கான கேப்ஷனில் ஷேக் முகமது தனது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் விடுமுறையைக் கழிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் பதிவு வழியாக அமீரகம் மற்றும் உலக மக்களின் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது இன்ஸ்டாகிராம் இடுகையில், “விடுமுறைகளை குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் செலவிடுவது ஒரு ஆசீர்வாதம். ஈத் அல் ஃபித்ர் தினத்தில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலக மக்கள் தொடர்ந்து அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அவரது பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இந்த குடும்ப புகைப்படம் ஜனாதிபதியின் குடும்பத்தின் மீதான அன்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பல இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.