அமீரக செய்திகள்

GCC நாடுகளைச் சுற்றிப் பார்க்க விருப்பமா? விசிட் விசா மற்றும் இ-விசா குறித்த முழு விவரங்கள் இங்கே….

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் GCC நாடுகளான சவுதி அரேபியா, ஓமான், கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இ-விசா அல்லது பயண விசா இல்லாமல் பயணிக்கும் வாய்ப்பை பெறலாம். ஏனெனில் அவர்கள் வருகையின் போது விசா அல்லது அவர்களின் நேஷனாலிட்டி அல்லது தொழிலின் அடிப்படையில் இ-விசாவைப் பெற முடியும். மேலும், GCC குடியிருப்பாளர்கள் தங்கள் தொழிலைப் பொருட்படுத்தாமல் eVisa க்கு விண்ணப்பிக்க சவுதி அனுமதிப்பதுடன், வருகை மற்றும் விசா இல்லாத நுழைவுக்கான வகைகளை ஓமான் அரசும் விரிவுபடுத்தியுள்ளது. அதுகுறித்த விவரங்களை இங்கே காணலாம்.

1. சவுதி அரேபியா:

A. வருகையில் விசா (Visa on Arrival): சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ சுற்றுலா போர்ட்டலான https://visitsaudi.com/ இன் படி, பின்வரும் மூன்று வகையான பார்வையாளர்கள் வருகையின் போது விசாக்களை (Arrival Visa) பெறலாம்.

  • தகுதியான 49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்.
  • அமெரிக்கா, UK மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிரந்தர குடியிருப்பாளர்கள்.
  • UK, US அல்லது Schengen பகுதியில் இருந்து சுற்றுலா அல்லது வணிக விசா வைத்திருப்பவர்கள்.

B. சவுதி இ-விசாவைப் பெறும் GCC குடியிருப்பாளர்கள்:

— சவுதி அரேபியாவின் சுற்றுலா அமைச்சகம், GCC நாடுகளில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களும், அவர்களது தொழிலைப் பொருட்படுத்தாமல், சுற்றுலா விசா அல்லது eVisa க்கு விண்ணப்பிக்கலாம் என்று கடந்த மார்ச் 9 அன்று அறிவித்திருந்தது. அத்துடன், GCC குடியிருப்பாளரின் அனைத்து முதல்-நிலை உறவினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் வருகை தரும் வீட்டுப் பணியாளர்களும் eVisa ஐப் பெறலாம் என்று தெரிவித்தது.

— இருப்பினும், வெளிநாட்டவர்களைச் சார்ந்திருப்பவர்கள் GCC நாட்டிலிருந்து செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசாவைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, UAEயில் வசிப்பவர்களாக இருந்தால், இந்த இ-விசா மூலம் நீங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை சந்திக்கலாம், நாட்டை சுற்றிப்பார்க்கலாம் மற்றும் ஹஜ் சீசன் தவிர எந்த நேரத்திலும் உம்ரா செய்யலாம்.

C. GCC குடியிருப்பாளர்கள் சவுதி இ-விசாவிற்குத் தகுதியானவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிபந்தனைகள்:

  • குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் குடியுரிமை ஆவணம்.
  • குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
  • பெற்றோர் இல்லாமல் பயணம் செய்யும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18.

2. கத்தார்:

கத்தாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://visitqatar.com/ -இன் படி, பார்வையாளர்களுக்கான விசா விருப்பங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

A. வருகையில் விசா (Visa on Arrival): கத்தாருக்கு வருகையில் விசா பெற 95 க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்கள் தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நேஷனாலிட்டியைப் பொறுத்து தங்கியிருக்கும் காலம் மற்றும் தேவைகள் வேறுபடும்.

எடுத்துக்காட்டாக, வருகையின் போது விசாவிற்கு தகுதியான சில நாட்டவர்கள் 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகிறார்கள், மற்ற நாட்டவர்கள் நாட்டில் 30 நாட்கள் தங்குவதற்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம். எனவே, https://visitqatar.com/intl-en/practical-info/visas/visa-details என்ற லிங்க் மூலம் கத்தாருக்கு வருகையில் விசா பெற தகுதியான நாடுகளின் பட்டியலை காணலாம்.

B. குறிப்பிட்ட நாட்டினருக்கு கத்தாருக்கான விசா தள்ளுபடி: இந்தியா, பாகிஸ்தான், உக்ரைன், ஈரான் மற்றும் தாய்லாந்து நாட்டவர்கள் https://www.discoverqatar.qa/ என்ற இணையதளம் மூலம் ஹோட்டல் முன்பதிவு செய்து 30 நாட்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டால் மட்டுமே விசா பெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், இந்திய, பாகிஸ்தான் மற்றும் ஈரானிய நாட்டினர் திரும்புவதற்கு டிக்கெட் வைத்திருக்க வேண்டும். அத்துடன், நீங்கள் https://www.discoverqatar.qa/mandatory-hotels-for-visa-on-arrival என்ற லிங்க் மூலம் ஹோட்டல்களின் பட்டியலைக் காணலாம்.

C. Hayya கார்டு வைத்திருப்பவர்கள்: கடந்த ஜனவரி மாதம், கத்தார் உள்துறை அமைச்சகம், குடியுரிமை பெறாத பார்வையாளர்களுக்கான ஹய்யா கார்டின் செல்லுபடியை ஜனவரி 24, 2024 வரை நீட்டித்தது. ஹய்யா கார்டு என்பது கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த FIFA உலகக் கோப்பையில் ரசிகர்களை அனுமதிக்க வழங்கப்பட்ட கார்டாகும். எனவே, நீங்கள் ஹய்யா கார்டை வைத்திருக்கும் UAE குடியிருப்பாளராக இருந்தால், கத்தாருக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி உண்டு. அதுமட்டுமின்றி, ஹய்யா கார்டு உடையவர்கள் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.

ஹய்யா கார்டு வைத்திருப்பவர்கள் பெறும் நன்மைகள்:

  • மூன்று குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களை அழைக்க,  ‘Hayya with Me’ அம்சம் உள்ளது. இந்த அம்சம் சர்வதேச பார்வையாளர்கள் மூன்று ஹய்யா அட்டை வைத்திருப்பவர்கள் அல்லாதவர்களை கத்தாருக்கு அழைக்க அனுமதிக்கிறது.
  • மாநில துறைமுகங்களில் இ- கேட் அணுகல்
  • கட்டணம் எதுவும் தேவையில்லை.

D. அங்கீகரிக்கப்பட்ட தொழில்களைக் கொண்ட GCC குடியிருப்பாளர்களுக்கான வருகைக்கான கத்தார் விசா:

— நீங்கள் UAE-ல் வசிப்பவராக இருந்து, வருகையில் விசாவிற்கு தகுதியான தேசங்களுக்கு தகுதி பெறவில்லை அல்லது ஹய்யா கார்டு இல்லை என்றால், கத்தாரின் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் இருந்தால், கத்தாருக்குள் நுழைவதற்கான விசாவை நீங்கள் பெறலாம். மேலும்,  https://portal.moi.gov.qa/wps/wcm/connect/aa5b6e71-e49e-460f-8c64-82ff9f71b1f5/on.pdf?MOD=AJPER இந்த லிங்க் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தொழில்களின் பட்டியலைக் காணலாம்.

— அத்துடன் வருகையின் போது விசாவிற்கு, உங்களிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் UAE குடியிருப்பு அனுமதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றால், உங்கள் நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜென்சி மூலமாகவோ அல்லது உங்கள் சொந்த நாட்டில் உள்ள கத்தார் தூதரகத்தின் மூலமாகவோ கத்தார் வருகை விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

3. ஓமான்:

சுமார்  103 நாடுகளுக்கு மேல் உள்ள சுற்றுலாப் பயணிகள் 14 நாட்கள் வரை ஓமனுக்கு விசா இல்லாமல் நுழையலாம் என்று மார்ச் 14 அன்று  ராயல் ஓமன் போலீஸ் (ROP) தெரிவித்தது,  அதன்படி, அமெரிக்க, கனடா, யுனைடெட் கிங்டம், ஷெங்கன் நாடுகள் மற்றும் ஜப்பானுக்கான நுழைவு விசா இருந்தால், இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகையின் போது விசாவைப் பெறலாம்.

UAEஇல் வசிப்பவர்களுக்கு வருகையில் விசா:

ராயல் ஓமன் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலில் பணிபுரியும் வரை, UAE குடியிருப்பாளர்கள் அவர்களின் தேசியத்தைப் பொருட்படுத்தாமல், வருகையின் போது விசா பெற தகுதியுடையவர்கள். https://evisa.rop.gov.om/ இந்த லிங்கை கிளிக் செய்து அங்கீகரிக்கப்பட்ட தொழில்களின் பட்டியலை நீங்கள் காணலாம்.

தேவையான ஆவணங்கள்:

  • ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு UAE ரெசிடென்ஸ் அனுமதி.
  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

வழங்கப்படும் விசாவானது, ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் அல்லது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் சிங்கிள் என்ட்ரி விசாவாகவும், மல்ட்டிபிள் என்ட்ரி  விசாவாகவும் கிடைக்கும், ஒவ்வொரு வருகையிலும் அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருக்க அனுமதி இல்லை.

4. பஹ்ரைன்:

பஹ்ரைனின் தேசியம், கடவுச்சீட்டு மற்றும் வதிவிட விவகாரங்கள் (NPRA), 60 க்கும் மேற்பட்ட நாட்டினர் வருகையின் போது விசா பெற பஹ்ரைன் அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 14 நாட்களுக்கு மேல் நாட்டில் தங்கலாம். https://www.evisa.gov.bh/list-of-onarrival-visa-country.html என்ற லிங்க்கைப் பயன்படுத்தி உங்கள் குடியுரிமை விசாவிற்கு தகுதியுடையதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.

A. UAE குடியிருப்பாளர்களுக்கான வருகையில் விசா: பஹ்ரைனின் NPRA இன் படி, திறமையான தொழில்களில் உள்ள UAE குடியிருப்பாளர்கள் வருகையின் போது விசாவிற்கு தகுதியுடையவர்கள் மற்றும் சிங்கிள் என்ட்ரி அனுமதியில் இரண்டு வாரங்கள் வரை நாட்டில் தங்கலாம். இருப்பினும், விசாவிற்கு தகுதி பெற நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன:

  •  குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் UAE ரெசிடென்ஸ் அனுமதி
  • குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • விண்ணப்பதாரர் திறமையான தொழிலில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.
  • திரும்புவதற்கு டிக்கெட் இருக்க வேண்டும்.
  • ஹோட்டல் முன்பதிவு விவரங்கள்.

B. பஹ்ரைனுக்கான மல்ட்டிப்புள் இ-விசா: திறமையான தொழிலில் பணிபுரியும் அமீரக குடியிருப்பாளர்கள் பஹ்ரைனுக்கான பின்வரும் மல்ட்டிப்புள் இ-விசாவிற்கும் விண்ணப்பிக்கலாம்:

  • ஒரு மாத பல நுழைவு விசா
  • மூன்று மாத பல நுழைவு விசா
  • ஒரு வருட பல நுழைவு விசா

அதுமட்டுமின்றி, NPRA eVisa போர்டல் – www.evisa.gov.bh அல்லது உங்கள் நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜென்சி  மூலம் பஹ்ரைனுக்கான பல நுழைவு விசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

5. குவைத்:

குவைத்தின் உள்துறை அமைச்சகத்தின் (MOI) கூற்றுப்படி, 50 க்கும் மேற்பட்ட நாட்டினருக்கு வருகையின் போது விசா வழங்கப்படுகிறது. நாடுகளின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்: https://evisa.moi.gov.kw/evisa/home_e.do

GCC குடியிருப்பாளர்களுக்கான குவைத் இ-விசா:

எவ்வாறாயினும், நீங்கள் UAE குடியிருப்பாளராக இருந்தால், உங்கள் குடியுரிமை விசா இல்லாத நுழைவுக்குத் தகுதியான நாடுகளின் பட்டியலில் இல்லை என்றால், நீங்கள் GCC குடியிருப்பாளர்களுக்கான eVisa அல்லது சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இ-விசாவிற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • பாஸ்போர்ட் மற்றும் ஆறு மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் UAE குடியிருப்பு அனுமதி
  • திரும்புவதற்கு டிக்கெட் இருக்க வேண்டும்.
  • குவைத்தில் அவர்கள் வசிக்கும் விவரங்களை அளிக்க வேண்டும்

அதேசமயம், அங்கீகரிக்கப்பட்ட தொழிலில் பணிபுரிய வேண்டும். மேலும், குவைத்தின் உள்துறை அமைச்சகம் (MOI) eVisa தளம் – evisa.moi.gov.kw அல்லது உங்கள் சொந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜென்சி மூலம் GCC குடியிருப்பாளர்களுக்கான குவைத் eVisa-க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!