ADVERTISEMENT

UAE: பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் தாறுமாறாக முந்திச் சென்ற வாகனம்..!! அபராதம் விதித்து அபுதாபி காவல்துறை எச்சரிக்கை….!!

Published: 1 May 2023, 5:47 PM |
Updated: 1 May 2023, 5:52 PM |
Posted By: Menaka

அபுதாபி சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் வாகன ஓட்டி ஒருவர் பொறுப்பற்ற முறையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி பிறரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இரண்டு கடுமையான போக்குவரத்து விதிகளை மீறியது கண்டறியப்பட்டுள்ளது. இதனையொட்டி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி காவல்துறையின் கூற்றுப்படி, வாகன ஓட்டி சாலையின் விளிம்பில் இருந்து ஆபத்தான முறையில் முந்திச் சென்றது மற்ற ஓட்டுநர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி சாலையில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பதிவாகியிருந்த நிலையில், விழிப்புணர்வுக்காக அந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதுபோன்று சாலையின் ஓரத்தில் இருந்து திடீரென டெயில்கேட் செய்வது மற்றும் முந்திச் செல்வது ஆகிய இரண்டும் முறையே 400 திர்ஹம் மற்றும் 1000 திர்ஹம் வரை கடுமையான அபராதம் விதிக்கப்படும் குற்றங்களாகும். மேலும், டெயில்கேட் செய்பவர்களுக்கு நான்கு பிளாக் பாயிண்டுகளும், தாறுமாறாக முந்திச் செல்பவர்களுக்கு ஆறு பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


எனவே, சாலையை பாதுகாப்பானதாக வைத்திருக்க பங்களிக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் அழைப்பு விடுத்துள்ளது.