ADVERTISEMENT

UAE: ஆசை காட்டும் ஆன்லைன் விளம்பரம்!! – சமூக ஊடகங்களில் கவனமாக இருக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை..!!

Published: 1 May 2023, 7:07 PM |
Updated: 1 May 2023, 7:19 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்களை குறி வைத்து சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி அபாயங்களில் கவனமாக இருக்குமாறு அமீரக குடியிருப்பாளர்களை அபுதாபி அரசு வக்கீல் அலுவலகம் எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் விரைவான லாபம், கவர்ச்சிகரமான வருமானம் மற்றும் அதிக வெகுமதிகள் ஆகியவற்றை உறுதியளிக்கும் ஆன்லைன் விளம்பரம் மூலமாக மோசடி கும்பல் மக்களை தவறாக வழிநடத்துவதாக அலுவலகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அபுதாபி அரசு வக்கீல் அலுவலகத்தின் பொது வழக்குரைஞர் ஒருவர் கூறுகையில், சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள், இத்தகைய அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், சமூக ஊடகங்களில் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எனவே, இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் பண பரிமாற்றம் போன்ற நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டால், முதலில் அந்த நிறுவனத்திடம் அதிகாரிகளால் வழங்கப்பட்ட தேவையான லைசன்ஸ் இருப்பதை உறுதி செய்யுமாறு குடியிருப்பாளர்களை அமீரக மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அமீரகத்தில் வயர் மோசடி என்பது சட்ட விரோதமான செயலாகும். மேலும், அதன் குற்றவாளிகளை விசாரணைக்கு அம்பலப்படுத்துவதாக பொது வழக்குரைஞர் கூறியுள்ளார். எனவே, எந்தவொரு மோசடியான வழியையும் பயன்படுத்தி அல்லது தவறான பெயரைப் பயன்படுத்தி தனக்கோ அல்லது பிறருக்கோ ஒரு அசையும் சொத்து, ஒரு நன்மை, ஒரு ஆவணம் அல்லது அத்தகைய ஆவணத்தின் கையொப்பத்தை சட்டவிரோதமாகப் பெறுபவர் தண்டிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோசடிகளுக்கு தண்டனையாக ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 250,000 திர்ஹம்ஸ் முதல் அதிகபட்சம் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்று தண்டனையாக விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT