அமீரக செய்திகள்

UAE: ஒரு திர்ஹம் செலவில்லாமல் 24×7 என எல்லா நேரங்களிலும் இலவச உளவியல் சிகிச்சை பெற புதிய முயற்சி..!! எந்த இன்சூரன்ஸில் உள்ளவர்களுக்கு தெரியுமா..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பிட்ட காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் இனி ஒரு திர்ஹம் கூட செலவில்லாமல், எப்போது வேண்டுமானாலும், அதாவது 24/7 நேரமும் மனநல ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெற முடியும் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

WellxMind எனப்படும் புதிய திட்டத்தை ஏற்கனவே உள்ள இன்சூரன்ஸ் திட்டத்தில் ஒருங்கிணைத்து, பயனாளிகளுக்கு ஆன்லைன் கவுன்சிலிங், சிகிச்சை மற்றும் பிற மனநலச் சேவைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் அல்லது கணினி மூலம் WellxMind சேவைகளை அணுக, Wellx-இயங்கும் காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Wellx ஆப்-இல் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புது முயற்சி குறித்து Wellx இன் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜாவேத் அக்பர்லாலி அவர்கள் பேசுகையில், நாட்டில் மன நிம்மதியான, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் மற்றும் ​​WellxMind இதை அடைவதற்கான சரியான பாதையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது எப்படி வேலை செய்கிறது?

>> தற்போது, ​​WellxMind துபாய் நேஷனல் இன்சூரன்ஸ், சலாமா மற்றும் NLGI ஆகிய மூன்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. ஆனால், அதிகமான வாடிக்கையாளர்கள் வருவதால் இந்த வரம்பை கணிசமாக விரிவுபடுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

>> முதலில் மக்களின் பிரச்சினையை அடையாளம் காண, முதலில் பயிற்சி பெற்ற சிகிச்சையாளர் அல்லது ஆலோசகருடன் தனிப்பயனாக்கப்பட்ட ஆரம்ப மதிப்பீட்டை மேற்கொண்டு, பின்னர் அதற்கேற்ற மனநல நிபுணருடன் அவர்கள் இணைக்கப்படுவார்கள். அடுத்து அவர்களின் பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சையின் அளவு மற்றும் வகை குறித்து சிகிச்சையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் முடிவு செய்வார்கள்.

>> மேலும், சிகிச்சையின் வரம்பு வாடிக்கையாளர்களின் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் அவர்களின் தற்போதைய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நன்மைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

மனநல சிகிச்சையின் செலவு:

உலகளவில் நான்கு பேரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான மனநல சவாலை எதிர்கொள்கின்றனர், ஆனால் மனநல ஆதரவு தேவைப்படும் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதை நாடுவதில்லை. மேலும், விழிப்புணர்வு இல்லாமை, வரையறுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை மற்றும் மனநல சிகிச்சைக்கான அதிகப்படியான விலை போன்றவை GCC-இல் மனநல சிகிச்சை அணுகலை மேலும் தடுப்பதாகக் கூறப்படுகிறது.

உதாரணமாக, அமீரகத்தில் ஒரு உளவியல் சிகிச்சை அமர்வுக்கு ஆயிரம் திர்ஹம் அல்லது அதற்கும் அதிகமாக செலவாகலாம். எனவே, இது போன்ற சவாலைத் தவிர்க்க அமீரகத்தைத் தளமாகக் கொண்ட ஒரு ஆலோசனை சேவையான அமல் கவுன்சில் உடன் Wellx கைகோர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் ஒருவருக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவது இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Wellx இன் இணை நிறுவனரும் தலைமை தயாரிப்பு அதிகாரியுமான டாக்டர் அனுஷ்கா அவர்கள் கூறியதாவது: “மனநல ஆதரவைத் தேடுவது சிலருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் மக்கள் ரகசியமான, பாதுகாப்பான முறையில் ஆதரவை அணுகுவதை எளிதாக்கும் வகையில் WellxMind ஐ வடிவமைத்துள்ளோம்” என்றார்.

மேலும், முழுக்க முழுக்க ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் சேவைகளை வழங்குவதால், வாடிக்கையாளர்கள், தங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம், அவர்களின் வீடு, அலுவலகம் அல்லது அவர்களுக்கு வசதியான எந்த இடத்திலிருந்தும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம், திட்டமிடலாம் மற்றும் சிகிச்சை அல்லது ஆலோசனைகளை ஆன்லைனில் அணுகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!