அமீரக செய்திகள்

வங்கிக்கு செல்லாமலே உங்களின் எமிரேட்ஸ் ஐடியை வங்கிக்கணக்கில் புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ..!!

உங்கள் எமிரேட்ஸ் ஐடி விவரங்களை உங்கள் வங்கிக் கணக்கில் அப்டேட் செய்யுமாறு உங்கள் வங்கி உங்களிடம் கேட்டிருக்கிறதா?? அமீரக மத்திய வங்கியின் KYC விதிமுறைகளின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும். ஆகவே, உங்கள் வங்கியின் சேவைகளைத் தொடர்ந்து அணுக, நீங்கள் அந்தத் தகவலைப் புதுப்பிப்பது அவசியம்.

இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் உங்கள் ஆவணங்களை புதுப்பிக்க, அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் செல்வது பலருக்கு சிரமமாக இருக்கலாம். இருப்பினும், வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி உங்கள் எமிரேட்ஸ் ஐடியைப் புதுப்பிக்க வங்கிகள் மாற்று வழிகளை வழங்குகின்றன. அவ்வாறு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் KYC விவரங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கும் அனைத்து விதமான வழிகளின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ஆன்லைன் வழியாக உங்கள் வங்கிக் கணக்கில் எமிரேட்ஸ் ஐடியை எவ்வாறு அப்டேட் செய்யலாம்?

உங்கள் எமிரேட்ஸ் ஐடியை ஆன்லைன் பேங்கிங் மூலம் எளிதாக அப்டேட் செய்யலாம். அதற்கு உங்கள் ஆன்லைன் பேங்கிங் விவரங்களுடன் உள்நுழைந்து உங்கள் ப்ரொஃபைலை கிளிக் செய்தால் போதும். அதற்கு கீழ், புதுப்பிக்கப்பட்ட எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட்டைப் பதிவேற்ற உங்களுக்கு விருப்பம் வழங்கப்படும். அதன்பிறகு, PDF வடிவத்தில் இருக்கும் எமிரேட்ஸ் ஐடியின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் அல்லது டிஜிட்டல் பதிப்பை நீங்கள் பதிவேற்றலாம். உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் டிஜிட்டல் நகலை எவ்வாறு அணுகுவது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

மொபைல் அப்ளிகேஷன்:

நீங்கள் எளிதாக எமிரேட்ஸ் ஐடியைப் பதிவேற்றுவதற்காக உங்கள் வங்கி அதன் மொபைல் அப்ளிகேஷன் மூலம் பதிவேற்றும் விருப்பத்தையும் அனுமதிக்கிறது. அதன் படி, முதலில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து, உங்கள் அடையாள விவரங்களைப் புதுப்பிக்க விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், உங்கள் எமிரேட்ஸ் ஐடியைப் புதுப்பிக்க பயன்பாட்டில் உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் முன் மற்றும் பின்புறத்தினை ஸ்கேன் செய்யவும். இறுதியாக, உங்களின் எமிரேட்ஸ் ஐடி புதுப்பிக்கப்பட்டு வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது என்ற அறிவிப்பைப் பெறுவீர்கள்.

ATM:

உங்களுக்கு அருகில் உள்ள Mashreq மற்றும் Emirates NBD போன்ற சில வங்கிகளால் வழங்கப்படும் ATMக்கு செல்வது மற்றொரு வழியாகும். ATM-இல் எவ்வாறு பதிவேற்றுவது என்பது குறித்த வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை:

  • உங்கள் பகுதியில் உங்கள் வங்கியின் ATMஐக் கண்டறிந்து, உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ATM-ல் செருகவும் (swipe).
  • உங்கள் ATM பின்-ஐ உள்ளிட்டு கோரிக்கைகள் அல்லது சுயவிவரப் பிரிவைத் தேர்ந்தெடுத்து, எமிரேட்ஸ் ஐடி புதுப்பிப்பைத் தட்டவும்.
  • பின்னர், உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டை எடுத்து உங்கள் எமிரேட்ஸ் ஐடியைச் செருகவும்.
  • சில நிமிடங்களில் உங்கள் எமிரேட்ஸ் அடையாள அட்டையை கையில் எடுக்கவும்.
  • அடுத்தபடியாக, ATM உங்கள் எமிரேட்ஸ் ஐடி விவரங்களை – உங்கள் பெயர் மற்றும் ஐடி எண் ஆகியவற்றைக் காண்பிக்கும், அதனையடுத்து ‘confirm’ என்பதைத் தட்டவும்.
  • கூடவே, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் OTP அனுப்பப்பட்டு அதை உள்ளிடுமாரும் கேட்கப்படலாம். அது உங்கள் வங்கியைப் பொறுத்தது.

மற்ற வழிமுறைகள்:

உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்டு, கால் சென்டர் முகவருடன் உங்கள் எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிக்கலாம். இருப்பினும், நீங்கள் இன்னும் வங்கியின் கிளைக்குச் செல்ல விரும்பினால், நடைமுறையை முடிக்க உங்களின் அசல் எமிரேட்ஸ் ஐடி அல்லது புதுப்பிக்கப்பட்ட எமிரேட்ஸ் ஐடியின் முன் மற்றும் பின்புற நகல் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!