ADVERTISEMENT

Hudayriyat ஐலேண்டுக்கான மாஸ்டர் திட்டத்தை வெளியிட்ட அபுதாபி!! – சர்ஃபிங், சைக்கிள் டிராக், சதுப்புநில நடை போன்ற சாகச அனுபவங்களை வழங்கும் மெகா திட்டம்…

Published: 28 Jun 2023, 8:20 PM |
Updated: 28 Jun 2023, 8:54 PM |
Posted By: Menaka

அபுதாபியில் பொழுதுபோக்கிற்கான சிறந்த இடமாக திகழும் ஹூதைரியாத் ஐலேண்டில் மேம்பாட்டு திட்டமானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இப்பகுதிக்கான பணியில் ஈடுபட்டு வரும் டெவலப்பரான Modon Properties நிறுவனம் ஹூதைரியாத் ஐலேண்டுக்கான மாஸ்டர் திட்டத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது ஓய்வு நேரத்தை சிறப்பாக அனுபவிக்கும் வகையில் இணையற்ற விளையாட்டு வசதிகள் மற்றும் தனித்துவமான விருந்தோம்பல் போன்றவற்றிற்கான நிபுணத்துவம் பெற்ற டெவலப்பர் நிறுவனமாகும்.

ADVERTISEMENT

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி அபுதாபி தீவின் பாதி பரப்பளவிற்குச் சமமான, சுமார் 51 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் வரவிருக்கும் இந்த மெகா திட்டம், நகரத்தின் அளவு மற்றும் விரிவாக்கத்தின் அடிப்படையில் ஒரு அற்புதமான மைல்கல்லைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் ஹுதைரியாத் தீவு இயற்கை சூழல் மற்றும் இணையற்ற குடியிருப்பு பகுதிகளுடன் நவீன விளையாட்டு வசதிகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இத்திட்டம் அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, அபுதாபியின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழும் ஹுதைரியாத் ஐலேண்டானது, பாப் அல் நோஜூம் கிளாம்பிங் ரிசார்ட், மர்சானா பீச், OCR பார்க், டிரெயில் எக்ஸ், பைக் பார்க் மற்றும் 321 ஸ்போர்ட்ஸ் போன்றவற்றின் தாயகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தற்பொழுது வெளியான விரிவான மெகா திட்டத்தில், 16 கிமீ கடற்கரைகள் உட்பட 53.5 கிமீ கடற்கரையை நகரின் நிலப்பரப்பில் சேர்ப்பது, உயர்தர விளையாட்டு வசதிகளை எமிரேட்டுக்கு கொண்டு வருவது, வெலோட்ரோம் அபுதாபி, சர்ஃப் அபுதாபி போன்ற செயற்கை வசதிகளை அமைப்பது, எமிரேட்டின் மிகப்பெரிய நகர்ப்புற பூங்கா மற்றும் 220 கிமீ நீளமுள்ள சைக்கிள் டிராக்குகள் உருவாக்குவது ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

சர்ஃப் அபுதாபி (Surf Abu Dhabi):

இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்பட உள்ள சர்ஃப் அபுதாபி, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட செயற்கை அலை வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இங்கு உலகின் மிக நீண்ட ரைடு, மிகப்பெரிய பேரல் (biggest barrel) மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அலைக் குளம் (man made wave pool) போன்ற சர்ஃபிங் வசதிகளை அனுபவிக்கலாம்.

அதேசமயம், இது அனுபவம் வாய்ந்த சர்ஃபர்ஸ் மற்றும் புதிதாக சர்ஃபிங்கில் ஈடுபடுபவர்கள் என இரு நிலைகளில் உள்ளவர்களையும் ஈர்க்கும் என்றும், கூடவே முக்கிய சர்வதேச சர்ஃபிங் போட்டிகளை நடத்துவதற்கு சிறந்த இடத்தை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

வெலோட்ரோம் அபுதாபி (Velodrome Abu Dhabi):

இது 2025 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்பட உள்ளதாகவும் மற்றும் பிராந்தியத்தின் முதல் யூனியன் சைக்லிஸ்ட் இன்டர்நேஷனல் (UCI) வகை 1 உள்ளரங்க சைக்கிள் ஓட்டுதல் டிராக்கைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, உலகளாவிய சாம்பியன்ஷிப்களை நடத்துவதற்கு சிறந்த இடமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஹுதைரியாத் மற்றும் அபுதாபி ஸ்கைலைனின் 360 டிகிரி காட்சிகளை வழங்கும் வெளிப்புறச் சுவர்களைச் சுற்றி 600 மீட்டர் சைக்கிள் ஓட்டும் டிராக் வழியாக தரையுடன் இணைக்கப்பட்ட கூரைத் தடம் அமைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய நகர்ப்புற பூங்கா (largest urban park)

ஹூதைரியாத் ஐலேண்டிற்கான மாஸ்டர்பிளானில் சேர்க்கப்பட்டுள்ள, சுமார் 2.25 மில்லியன் சதுர மீட்டரில் உருவாகவுள்ள இந்த பூங்கா, எமிரேட்டின் மிகப்பெரிய நகர்ப்புற பூங்காவாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இயற்கையை மையமாகக் கொண்ட இந்த இடம், உயரமான சைக்கிள் ஓட்டும் பாதை, சதுப்பு நில நடை (mangrove walk) போன்ற சாகச செயல்பாடுகளுக்கு தாயகமாக விளங்கும் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான முக்கிய உள்கட்டமைப்பை Modon Properties அடுத்த 18 மாதங்களில் நிர்மாணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.