ADVERTISEMENT

துபாய்: நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் எத்தனை நாட்களுக்கு நாட்டிற்குள் தங்கலாம்..?? நாட்டை விட்டு வெளியேறாமலே விசிட் விசாவைப் பெற முடியுமா..??

Published: 23 Jun 2023, 11:10 AM |
Updated: 23 Jun 2023, 11:15 AM |
Posted By: Menaka

துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டால், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சலுகை காலம் எத்தனை நாட்கள் இருக்கும்..?? மாறாக, நாட்டை விட்டு வெளியேறாமல் விசிட் விசாவைப் பெற முடியுமா..?? இது போன்ற சந்தேகங்கள் ஏராளமான ஊழியர்களின் மனதில் இருக்கலாம். அனைவரின் சந்தேகங்களுக்குமான விளக்கங்களை பின்வருமாறு பார்க்கலாம்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில், பொதுவாக ஒரு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது வேலையிலிருந்து ராஜினாமா செய்தாலோ முதலில் அவரது வேலை அனுமதிப் (work permit) பத்திரத்தை முதலாளி ரத்து செய்ய வேண்டும். மேலும், பணி அனுமதியை ரத்து செய்வது தொடர்பான பல்வேறு நடைமுறைகளை அவர் பின்பற்ற வேண்டும்.

வேலை அனுமதியை ரத்து செய்வதற்கான நடைமுறைகள்:

  1. பணி அனுமதியை ரத்து செய்வதற்கு மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் (MoHRE) குறிப்பிடப்பட்ட சேனல்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. தேவையான தரவு மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  3. பணி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில் தாமதம் அல்லது அதை புதுப்பிக்கத் தவறுதல் போன்ற செயல்பாடுகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும்
  4. ஊழியரின் அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கான நிறுவனத்தின் அங்கீகாரம்.
  5. அமைச்சர் அல்லது அவர் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரோ அவரால் தீர்மானிக்கப்படும் வேறு ஏதேனும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதேசமயம், ஒரு ஊழியரின் வேலை அனுமதிப் பத்திரத்தை முதலாளி ரத்து செய்யும் போது, அந்த ஊழியரின் அமீரக ரெசிடென்சி விசா ரத்து செய்யப்படும். எனவே, அமீரக ரெசிடென்சி விசா ரத்து செய்யப்பட்டதிலிருந்து ஊழியர் 60 நாட்கள் வரை சலுகைக் காலத்தில் நாட்டிற்குள் தங்க அனுமதி உள்ளது.

ADVERTISEMENT

அவ்வாறு சலுகைக் காலத்தில் நாட்டிற்குள் இருக்கும்போது, மற்றொரு அமீரக ரெசிடென்சி விசாவை ஊழியர் தனது வருங்கால முதலாளி அல்லது நிறுவனம், குடும்ப உறுப்பினர், அவருக்குச் சொந்தமான நிறுவனம்/ மற்றும் முதலீடுகள் அல்லது தொழிலின் அடிப்படையில் பயன்படுத்தி அமீரகத்தில் தனது ரெசிடென்ஸ் நிலையை மாற்றிக் கொள்ளலாம்.

இல்லையெனில், முதலாளி அல்லது நிறுவனத்தால் வழங்கப்படும் அமீரக ரெசிடென்ஸ் விசா ரத்து செய்யப்பட்டவுடன், அமீரகத்தில் வசிக்க விசிட் விசா/சுற்றுலா விசாவையும் தேர்வு செய்து தங்கலாம்.

ADVERTISEMENT

ஆகவே, மேற்கூறியவாறு அமீரகத்தில் இருந்து வெளியேறாமல் விசிட் விசா/சுற்றுலா விசாவைப் பெறலாம். இருப்பினும், நீங்கள் GDRFAயிடம் (General Directorate of Residency & Foreigners Affairs – Dubai) இருந்து கூடுதல் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.