அமீரக செய்திகள்

UAE: மிகவும் பிரபலமான இடங்களில் குளோபல் வில்லேஜ் முதலிடமாக தேர்வு..!! மீண்டும் பார்வையிட விரும்பும் இடங்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தல்…!!

உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த பிரசித்த பெற்ற இடமான துபாயின் குளோபல் வில்லேஜ் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து 2,000 க்கும் மேற்பட்டவர்களிடம் YouGov  நடத்திய கணக்கெடுப்பின் படி, அமீரகத்தில் கடந்த 12 மாதங்களில் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக குளோபல் வில்லேஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதனையடுத்து மேஜிக் பிளானட் இரண்டாவது இடத்திலும், துபாய் அக்வாரியம் அண்ட் அண்டர்வாட்டர் ஜூ (Dubai Aquarium and Underwater Zoo) மூன்றாவது இடத்திலும் உள்ளன. மேலும் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, அமீரக குடியிருப்பாளர்களில் ஐந்தில் இருவர் குளோபல் வில்லேஜைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதாவது, மற்ற பொழுதுபோக்கு இடங்களை விட இரண்டு மடங்கு பிரபலாமானதாக குளோபல் வில்லேஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அடுத்த 12 மாதங்களில் மீண்டும் பார்வையிட விரும்பும் இடங்களின் பட்டியலிலும் குளோபல் வில்லேஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்த ஆய்வில் பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வரும் வருடத்திற்குள் மீண்டும் குளோபல் வில்லேஜை பார்வையிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, துபாயில் குடும்பங்களுக்கான பிரபலமான மற்றும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக விளங்கும் குளோபல் வில்லேஜ் சமீபத்தில் முடிந்த சீசனில் ஏறத்தாழ 9 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இதில் உள்ள 27 பெவிலியன்கள் உலகெங்கிலும் உள்ள 90 க்கும் மேற்பட்ட வெவ்வேறு கலாச்சாரங்களைக் காட்சிப்படுத்தியதாகவும், மேலும் இது 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் 40,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 3,250 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் ஷாப்பிங் மற்றும் 175 க்கும் மேற்பட்ட சாகச ரைடுகள், 77 தனித்துவமான வானவேடிக்கை காட்சிகள் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் என இடைவிடாத உற்சாக அனுபவங்களைக் கண்டு பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது இந்தாண்டுக்கான குளோபல் வில்லேஜின் 28-வது சீசன் தொடங்கப்படும் தேதி மற்றும் நீட்டிக்கப்பட்ட காலம் குறித்து இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு அக்டோபர் 18 தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் 28, 2024 வரை 194 நாட்களுக்கு குளோபல் வில்லேஜ் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!