அமீரக செய்திகள்

துபாய் மெட்ரோவில் இ-ஸ்கூட்டர்களை எடுத்து செல்வதற்கான விதிமுறைகள்!! – RTA நினைவூட்டியுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் அபராதம்..!!

துபாய் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளிடையே இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், சாலைகளில் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நினைவூட்டியுள்ளது.

RTA வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் ரைடர்களுக்கு நியமிக்கப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் முதல், துபாய் மெட்ரோவை பயண்படுத்தும் மற்ற பயணிகளின் நடமாட்டத்தைத் தடுக்கவில்லை என்பதை உறுதி செய்வது வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

RTA அறிவித்துள்ள மூன்று விதிகள்:

  1. அகலமான கேட் வழியாக மட்டும் செல்லவும்.
  2. மெட்ரோ நிலையங்களில் உங்கள் இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்களை மடித்து வைக்கவும்.
  3. மெட்ரோவில் ஏறியதும், அவற்றை லக்கேஜ் பகுதியில் வைக்கவும்.

துபாயில், எப்போதும் இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்கள் போன்ற நிலையான போக்குவரத்து முறைகள் ஊக்குவிக்கப்படுவதால், நகரம் முழுவதும் அவற்றுக்கென உள்ள டிராக்குகள் மற்றும் நியமிக்கப்பட்ட மண்டலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த வாகனங்களை பயண்படுத்தும் ரைடர்களின் பாதுகாப்புக்கும் RTA ஆல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட சில ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடும் ரைடர்களுக்கு  அபராதம் விதிக்கப்படும் என்றும் RTA நினைவூட்டியுள்ளது.

விதிமீறல்களும் தண்டனைகளும்:

  • நியமிக்கப்பட்ட பாதைகளுக்குள் செல்லத் தவறுதல் – 200 திர்ஹம் அபராதம்
  • ஒரு மணி நேரத்திற்கு 60 கிமீ க்கும் அதிகமான வேக வரம்பு கொண்ட சாலையில் ஓட்டுதல் – 300 திர்ஹம் அபராதம்
  • மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஓட்டுதல் – 300 திர்ஹம் அபராதம்
  • நடைபயிற்சி அல்லது ஜாகிங் பாதைகளில் ஸ்கூட்டர்களை ஓட்டுதல் அல்லது நிறுத்துதல் – 200 திர்ஹம் அபராதம்
  • முறையான அனுமதியின்றி இ-ஸ்கூட்டரைப் பயன்படுத்துதல் – 200 திர்ஹம் அபராதம்
  • பாதுகாப்பு ஆடைகள் அல்லது ஹெல்மெட் அணியாமல் இருத்தல் – 200 திர்ஹம் அபராதம்
  • வேக வரம்புகளை மீறுதல் – 100 திர்ஹம் அபராதம்
  • மற்றொரு பயணியை கூட ஏற்றிச் செல்லுதல் – 300 திர்ஹம் அபராதம்
  • பாதுகாப்புத் தேவைகளைக் கடைபிடிக்கத் தவறுதல் – 200 திர்ஹம் அபராதம்
  • தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யாத பைக்கை ஓட்டுதல் – 300 திர்ஹம் அபராதம்
  • நியமிக்கப்படாத இடங்களில் ஆபத்துகளை ஏற்படுத்தும் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பார்க்கிங் செய்தல் – 200 திர்ஹம் அபராதம்
  • தகவல் பலகைகளில் உள்ள வழிமுறைகளுக்கு இணங்கத் தவறுதல் – 200 திர்ஹம் அபராதம்
  • பாதசாரிகளுக்கான இடங்களை கடக்கும் போது சைக்கிளில் இருந்து கீழிறங்கத் தவறுதல் – 200 திர்ஹம் அபராதம்
  • விபத்து நடந்தால் அதை புகாரளிக்கத் தவறுதல் – 300 திர்ஹம் அபராதம்
  • சாலையில் இடதுபக்கத்தைப் பயன்படுத்துதல் – 200 திர்ஹம் அபராதம்
  • சாலைகளில் போக்குவரத்து திசைக்கு எதிர்திசையில் ஓட்டுதல் – 200 திர்ஹம் அபராதம்

Related Articles

Back to top button
error: Content is protected !!