அமீரக செய்திகள்

துபாயில் பல வசதிகளுடன் திறக்கப்பட்ட புதிய நடை பாலம்!! – மேலும் திறக்கப்படவுள்ள 6 புதிய நடை பாலங்கள்..!!

துபாயில் புதிதாக 120 மீட்டர் நீளமுள்ள நடைப்பாலம் ஒன்று பாதசாரிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA), அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் உள்ள துபாய் மருத்துவமனைக்கு அருகில், உமர் பின் அல் கத்தாப் மற்றும் அபு பக்கர் அல் சித்திக் ஸ்ட்ரீட்களின் சந்திப்பை இணைக்கும் பகுதியில் இந்த நடைபாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் சுமார் 120 மீட்டர் நீளமும், 3.4 மீட்டர் அகலமும், நிலத்தில் இருந்து 6.5 மீட்டர் உயரமும் கொண்டது என்று கூறப்படுகிறது. கூடுதலாக இதில் இரண்டு லிஃப்ட், படிக்கட்டுகள் மற்றும் அலாரங்கள், தீ தடுப்பு மற்றும் தொலை கண்காணிப்பு அமைப்புகள் போன்ற எலக்ட்ரோ மெக்கானிக்கல் அமைப்புகளுக்கான அறை ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதிதாக திறக்கப்படும் இந்த நடைபாலங்களில் பாதசாரிகளின் வசதிகளுக்காக லிஃப்ட், சைக்கிள் மற்றும் இ.ஸ்கூட்டருக்கான டிராக்குகள் மற்றும் பைக்குகளுக்கான ரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் தவிர துபாயின் வேறு சில முக்கியமான பகுதிகளில் அமைக்கப்படவுள்ள 6 நடைப்பாலங்கள் தற்போது கட்டுமானத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானத்தில் உள்ள ஆறு நடை பாலங்கள்:

1. அல் சக்ர் மற்றும் அல் மினா சந்திப்புகளுக்கு இடையே அல் மினா ஸ்ட்ரீட். (Al Mina Street between Al Saqr and Al Mina intersections)

2. ஷேக் கலீஃபா பின் சையத் மற்றும் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா ஆகிய ஸ்ட்ரீட்களுக்கு இடையில் ஷேக் ரஷீத் பின் சையத் ஸ்ட்ரீட். (Sheikh Rashid bin Saeed Street between Sheikh Khalifa bin Zayed and Sheikh Sabah Al Ahmad Al Jaber Al Sabah streets)

3. க்ரீக் ஹார்பர் மற்றும் ராஸ் அல் கோர் தொழில்துறை பகுதிக்கு இடையே ராஸ் அல் கோர் சாலை. (Ras Al Khor Road, between the Creek Harbour and Ras Al Khor industrial area)

4. நாத் அல் ஹமர் இல் உள்ள மர்ஹபா மால் மற்றும் வாஸ்ல் காம்ப்ளக்ஸ் குறுக்கே ராஸ் அல் கோர் சாலை. (Ras Al Khor Road, across Marhaba Mall and Wasl Complex in Nadd Al Hamar)

5. அல் குஸ் கிரியேட்டிவ் மண்டலத்தில் உள்ள அல் மனாரா சாலை. (Al Manara Road in Al Quoz Creative Zone)

6. அரேபியன் சென்டருக்கு எதிரே கவானீஜ் ஸ்ட்ரீட். (Khawaneej Street, opposite the Arabian Centre)

இந்த தரைப்பாலங்கள் துபாயை உலகின் பாதுகாப்பான நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு கட்டப்படுகிறது என்று RTA இன் இயக்குநர் ஜெனரலும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மத்தர் அல் தயர் கூறியுள்ளார்.

குறிப்பாக, இதுபோன்ற உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகளுக்கு வழங்குவதன் மூலம், த ரன்-ஓவர் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை பூஜ்ஜியமாக்க முயற்சி செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டில் துபாயில் மொத்தம் 13 நடை பாலங்கள் இருந்துள்ளன, தற்போது கடந்த ஆண்டு இறுதியில் 129 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 17 ஆண்டுகளில் நடைபாதைகளின் எண்ணிக்கை 10 மடங்குக்கு மேல் அதிகரித்திருப்பத்தைக் காணலாம்.

கூடுதலாக, 2021 மற்றும் 2026 க்கு இடையில் RTA 36 தரைப்பாலங்களை அமைத்து மொத்த எண்ணிக்கையை 165 ஆக உயர்த்தும் என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, சாலையில் ஏற்படும் ரன்-ஓவர் விபத்துக்களின் விகிதம், போக்குவரத்து தீவிரம், சாலையின் இருபுறமும் மக்களின் நடமாட்டம், பாதசாரி கடக்கும் தூரம், பொது போக்குவரத்து நிலையங்களின் இருப்பிடங்கள் மற்றும் சந்தைகள், வணிக மையங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ள பகுதிகள் போன்ற நெரிசல் மிகுந்த பகுதிகளிலேயே தரைப்பாலங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!