ADVERTISEMENT

துபாய் முழுவதும் பார்க்கிங் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள புதிய சைன்போர்டுகள்!! – QR குறியீடுகள் மூலம் மேம்படுத்தப்பட்ட கட்டணச் சேவை…

Published: 1 Jun 2023, 7:11 PM |
Updated: 1 Jun 2023, 7:58 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), வாடிக்கையாளர்கள் எளிதாக பார்க்கிங் கட்டணம் செலுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே, கட்டணம் செலுத்தும் வசதியை மேம்படுத்தும் நோக்கில் நகரம் முழுவதும் உள்ள பார்க்கிங் மண்டலங்களில் 17,500 புதிய திசை பலகைகளை (directional signs) ஆணையம் அமைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பலகைகளில் பொது பார்க்கிங் கட்டணம், சேவை நேரம் மற்றும் கட்டண வழிகள் பற்றிய விவரங்கள் உட்பட அத்தியாவசிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இது போன்ற மேம்படுத்தப்பட்ட சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருவதற்கும், பார்க்கிங் பயன்பாட்டிற்கான சிறந்த தீர்வுகளை வழங்குவதற்கும் RTA இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

இந்த முயற்சி குறித்து போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சியின் பார்க்கிங் இயக்குநர் ஒசாமா அல் சஃபி அவர்கள் கூறுகையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள பலகைகள் இரவில் தெளிவாகத் தெரியும் மற்றும் அதில் கட்டணம் செலுத்துவதற்கான நான்கு QR குறியீடுகளும் இடம் பெற்றிருக்கும் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இந்த QR குறியீடுகள் RTA இன் செயலியைப் பதிவிறக்குவதற்கான ஒரு சிறப்பு ரீடரையும், வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் செலுத்துவதற்கான மற்றொரு அம்சத்தையும் உள்ளடக்கியுள்ளது. எனவே, வாடிக்கையாளர் அதை ஸ்கேன் செய்வதன் மூலம் வாட்ஸ்அப் வழியாக பணம் செலுத்தும் சேவைக்கு எடுத்துச் செல்லப்படுவார்கள். அதன்பிறகு, வாகன விவரங்கள் மற்றும் பார்க்கிங் காலத்தை உள்ளிட்டதும், இறுதியாக வாடிக்கையாளர் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவார்கள் என்று அல் சஃபி விளக்கமளித்துள்ளார்.

இந்த QR குறியீடுகள் மூலம், வாடிக்கையாளர் எந்தவொரு மொபைல் ஆப்ஸைப் பதிவிறக்காமல் அல்லது பார்க்கிங் மண்டலத்தைக் குறிப்பிடாமல் Apple Pay அம்சத்தைப் பயன்படுத்தி iPhone சாதனங்களுக்கான ஆப் கிளிப்புகள் மூலம் பணம் செலுத்த முடியும். இவற்றுடன் SMS மூலம் கட்டணம் செலுத்துவதற்கான QR குறியீடும் இடம்பெறும். இதில் பயனருக்கு தரவுத் தொகுப்பு தேவையில்லை. இதில் வாகன விவரங்களை உள்ளிட்டு மணிநேர எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்த பிறகு ஒரு SMS உருவாக்குவதற்கான விருப்பமும் உள்ளது என்று அல் சஃபி கூறியுள்ளார். குறிப்பாக, இந்தச் சேவையானது பயனர்கள் முன்பு பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் உள்ளிடுவதற்குப் பதிலாக அவற்றைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையில், RTA இன் வாடிக்கையாளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட் டேப்லெட்டுகள் மூலம் தங்கள் சேவைக் கட்டணத்தைச் செலுத்த விரும்புவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளதால், பொது வாகன நிறுத்தத்திற்கான கட்டண விருப்பங்களைக் காண்பிக்கும் சைன்போர்டுகள் தேவை என்று RTA தெரிவித்துள்ளது.