அமீரக செய்திகள்

துபாய்: சம்மருக்காக திறக்கப்பட்ட உட்புற விளையாட்டு அரங்கம்.. அனுமதி இலவசம்.. முன்பதிவு செய்வது எப்படி..??

துபாய் உலக வர்த்தக மையத்தில் (DWTC) அமைந்துள்ள நகரின் மிகப்பெரிய உட்புற கோடைகால விளையாட்டு அரங்கமான துபாய் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் (DSW) விளையாட்டு அரங்கில் 13வது ஆண்டாக விளையாட்டு சீசன் ஆரம்பமாகியுள்ளது. இதில் பார்வையாளர்கள் கூடைப்பந்து, பேடல், டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து என அனைத்து போட்டிகளையும் கண்டுகளிக்கும் வாய்ப்பும் அதில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 100 நாட்களுக்கு மேல் நீடிக்கும் இந்த விளையாட்டு சீசனை ஜூன் 1 அன்று தொடங்கியுள்ளது. இது செப்டம்பர் 10, 2023 வரை இயங்கும் என்று கூறப்படுகிறது.

DSW அரங்கிற்கு நுழைவுக்கட்டணம் இலவசம் என்றாலும், பார்வையாளர்கள் பயன்படுத்தும் விளையாட்டு பகுதிகள் மற்றும் பங்கேற்கும் விளையாட்டு செயல்பாடுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்பமாக வரும் நபர்களுக்கு சில இலவச செயல்பாடுகளும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதற்கு DSW ஆப் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகும்.

குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச செயல்பாடுகள்:

  1. கால்பந்து குளம் (Football Pool)
  2. மினி கோல்ஃப்
  3. கால்பந்து
  4. ரெட்ரோ வீடியோ கேம்ஸ்
  5. ராட்சத ஜெங்கா (Giant Jenga)
  6. கை மல்யுத்தம் (Arm Wrestling)

பதிவு செய்ய வேண்டிய ஒன்பது விளையாட்டு நடவடிக்கைகள்:

அரங்கில் கிடைக்கும் விளையாட்டு செயல்பாடுகளின் பட்டியல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  1. கால்பந்து – ஆறு உட்புற ஆடுகளங்கள்.
  2. கூடைப்பந்து – மூன்று உட்புற மைதானங்கள்.
  3. படேல் – இரண்டு உட்புற கோர்ட்கள்
  4. டேபிள் டென்னிஸ்
  5. கைப்பந்து
  6. பூப்பந்து – பதினேழு உட்புற மைதானங்கள்
  7. கிரிக்கெட்
  8. டென்னிஸ் – இரண்டு உட்புற மைதானங்கள்
  9. பிக்கிள் பந்து

மேற்கூறிய அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளையும் அனுபவிக்க மைதானம் மற்றும் ஆடுகளங்களை மொபைல் போனில் கிடைக்கும் DSW ஆப் மூலம் பதிவு செய்யலாம் என்றும் கட்டணங்கள் ஒரு மணி நேரத்திற்கு என்ற அடிப்படையில் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சிக் கூடம்:

இங்குள்ள ஜிம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்டுடியோவை அணுகுவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் DSWஇல் உள்ள ஜிம், முழுசீசனுக்கான உறுப்பினர் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு சலுகை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உறுப்பினர் கட்டண விவரங்கள்:

  • சிங்கிள் என்ட்ரி (ஒரு முறை பாஸ்) – 25 திர்ஹம்
  • ஒரு மாத உறுப்பினர் (30 நாள் பாஸ்) – 300 திர்ஹம்
  • சீசன் மெம்பர்ஷிப் (100 நாள் பாஸ்) – 700 திர்ஹம்

இங்கு குழு உடற்பயிற்சி வகுப்புகளும் உள்ளன, அவற்றில் ஒரு அமர்வுக்கு (session) 35 திர்ஹம் செலவாகும். வகுப்புகள் காலை 7 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி வகுப்புகளின் வகைகள்:

துபாய் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்’ மொபைல் ஆப் மூலம் உடற்பயிற்சி வகுப்புகளுக்கான அட்டவணையைக் கண்டறிந்து, அமர்வை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • HIIT (high-intensity interval training classes)
  • சுற்று பயிற்சி
  • ஜூம்பா
  • தற்காப்பு கலை
  • யோகா
  • ஓடுதளம்

எப்படி முன்பதிவு செய்வது?

முதலில் நீங்கள் ‘Dubai Sports World’ ஆப்பை டவுன்லோட் செய்து பதிவு செய்ய வேண்டும். உங்களுடைய Google அல்லது Apple கணக்கின் மூலம் உள்நுழையலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியின் மூலம் உங்கள் முழுப்பெயர், மொபைல் எண், நாடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு ஆன்லைன் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.

நீங்கள் விவரங்களை உள்ளிட்டதும் கடவுச்சொல்லை உருவாக்கி ‘Create a Profile’ என்ற பொத்தானை கிளிக் செய்யவும். பயன்பாட்டில் முன்பதிவு செய்ததும், QR குறியீட்டை வழங்க வேண்டும். நீங்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தும் விளையாட்டு வசதிகளுக்கு மட்டுமே பணம் செலுத்தவீர்கள்.

குழந்தைகளுக்கான சம்மர் அகாடெமி:

இங்கு மொத்தம் குழந்தைகளுக்கான 12 ஸ்போர்ட்ஸ் அகாடெமிகள் உள்ளன. அவற்றில் நான்கு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான கூடைப்பந்து, கால்பந்து, பூப்பந்து மற்றும் டென்னிஸ் ஆகியவை அடங்கும்.

செயல்படும் நேரம்:

வாரத்தில் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும். இது ஷேக் சையத் சாலையில் DWTC இன் அரினா பகுதியில் அமைந்துள்ளது. மெட்ரோ வழியாக இப்பகுதியை எளிதில் அணுகலாம்.

பார்க்கிங் பகுதி:

இங்கு பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக DSW தெரிவித்துள்ளது. அதன்படி,

  • Za’abeel Hall 6க்கு வெளியே Za’abeel Plaza Parking இல் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். அங்கு இரண்டு மணிநேரத்திற்கு 5 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு கூடுதல் மணிநேரத்திற்கும் 5 திர்ஹம் செலவாகும்.
  • எக்சிபிஷன் ஸ்ட்ரீட் மல்டி ஸ்டோரி கார் பார்க் – ஒரு மணி நேரத்திற்கு 5 திர்ஹம் செலுத்த வேண்டும்.
  • அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் கார் பார்க் – ஒரு மணி நேரத்திற்கு 5 திர்ஹம் கட்டணமாகும்.

பார்க்கிங் நேரம்:

வாரத்தின் ஏழு நாட்களும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை

Related Articles

Back to top button
error: Content is protected !!