ADVERTISEMENT

முன்னணி பிராண்டுகளில் 80% வரை தள்ளுபடி..!! ஈத் அல் அதாவை முன்னிட்டு ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் மெகா சேல்ஸ் கண்காட்சி..!!

Published: 24 Jun 2023, 5:18 PM |
Updated: 28 Jun 2023, 11:47 AM |
Posted By: Menaka

இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் ஈத் அல் அதாவை முன்னிட்டு ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் ஈத் அல் அதா மெகா சேல்ஸ் கண்காட்சி 2023 தொடங்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியானது ஜூலை 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

குறிப்பாக, இங்கு ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏராளமான பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளை சிறந்த சலுகைகள் மற்றும் 80 சதவீதம் வரை தள்ளுபடிகளுடன் ஷாப்பிங் செய்யலாம்.

மேலும், இங்கு உயர்ந்த பிராண்டுகளின் தயாரிப்புகள் மற்றும் சில்லறை விற்பனைகளின் பரந்த அளவிலான வாசனை திரவியங்கள், அபாயாக்கள், பேஷன் பொருள்கள், அழகுசாதனப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்கள் என எக்கச்சக்க பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்த மெகா சேல்ஸ் விற்பனையில்,Baby Shop, Brand Bazaar, Bellissimmo, LC Waikiki, Splash, Brands For Less, Cotton Home, Happy Mom, Hoover, Komax, V Perfumes, Crayola, Vtech, Puma, Skechers உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகள் இடம்பெறுகின்றன.

இத்தகைய தள்ளுபடிச் சலுகைகளுடன் ஏராளமான எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பேஷன் தயாரிப்புகளின் விற்பனை கண்காட்சியாக இருப்பதால், ஈத் அல் அதாவைக் கொண்டாட நாட்டில் முதன்மையான இடமாக இருக்கும் என்று எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் முகமது அல் மிட்ஃபா அவர்கள் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், விற்பனைக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஜேக்கப் வர்கீஸ் அவர்கள் பேசுகையில், இது ஈத் அல் அதா கண்காட்சியின் மூன்றாவது பதிப்பாகும், மேலும் இந்த நிகழ்வு எமிரேட்டில் ஈத் கொண்டாட்டங்களின் இன்றியமையாத பகுதியாக மாறியுள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மெகா சேல்ஸ் கண்காட்சி ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். ஒரு நபருக்கு 5 திர்ஹம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக அணுகலாம். மேலும், பார்க்கிங் இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.