ADVERTISEMENT

அமீரகத்தில் வேலை தேடுபவரா? உங்கள் CVயில் இதெல்லாம் இருந்தாலே போதும்!! AI தேர்ந்தெடுக்கக்கூடிய CV யை உருவாக்குவது எப்படி?

Published: 15 Jun 2023, 12:55 PM |
Updated: 15 Jun 2023, 1:27 PM |
Posted By: Menaka

உலகெங்கிலும் இப்போது அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தான் முக்கியப் பங்காற்றி வருகிறது. மனிதர்களின் வேலைச் சுமையைக் வெகுவாக குறைக்கும் இத்தகைய AI தொழில்நுட்பம், தற்போது ஆட்சேர்ப்புத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆம், ஆட்சேர்ப்பு செய்பவர்கள் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து தினசரி பெறப்படும் CV களை பிரித்தெடுக்க AI தொழில்நுட்பத்தையே பெரும்பாலும் பயண்படுத்துகின்றனர்.

ADVERTISEMENT

அவ்வாறு இருக்கையில், விண்ணப்பதாரர்களின் CVக்களை AI எவ்வாறு பிரித்தெடுக்கிறது என்பதை அறிந்து கொள்வது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மிகவும் முக்கியமானது. அதாவது, ஒரு CVயை உருவாக்கும் போது, ​​மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் ஏற்ற வகையில், AI ஆல் எடுத்துக்கொள்ளும் வகையிலும், மற்றும் தங்கள் விண்ணப்பிக்கும் துறைகளுக்குத் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தியும் வேலையை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, CVஇல் விண்ணப்பதாரர்களின் முக்கிய திறன்களை உயர்த்திக் காட்டுவது மற்றும் வேலையுடன் தொடர்புடைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் AI ஸ்கிரீனிங்கில் தேர்ச்சி பெறலாம் என அமீரகத்தில் உள்ள ஒரு ஆட்சேர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்தில் ஜாப்ஸ் போர்டல் (jobs portal) Bayt AI+ ஐ அறிமுகப்படுத்தியது, இது வேலை தொடர்புடைய CVகளை பரிந்துரைப்பதுடன், வேலை விவரங்கள் (job description) மற்றும் முதலாளிகளுக்கு அவர்கள் குறிப்பிட்ட பதவிகளுக்கு மிகவும் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியலை வழங்குதல் போன்ற பணிகளையும் தானாகவே செய்கிறது.

அமீரகத்தை பொறுத்தவரையிலும், இங்கு எப்போதும் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்தப் பிராந்தியத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் ஒரு பதவிக்கு ஏற்ற திறன் மற்றும் தகுதிகளை CVயில் குறிப்பிட்டிருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்துவது எப்போதுமே முக்கியமானதாகும்.

ADVERTISEMENT

அதேசமயம், வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் HR வல்லுநர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி CV ஸ்கிரீனிங்கை தானியக்கமாக்குகின்றனர் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்வதும் மிக மிக அவசியம்.

சிறந்த CVயை உருவாக்குவது எப்படி?

நீங்கள் எப்போதும் உங்களது திறமைகளையும் அனுபவங்களையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் முன்வைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், ஆரம்ப ஸ்கிரீனிங் செயல்பாட்டின் போது AI அமைப்புகளால் உங்களது CV கள் கவனிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு SEO, content creation, Google Analytics மற்றும் social media management போன்ற வார்த்தைகள் பொருத்தமானதாக இருக்கும். அது போன்று தங்களின் துறை சாரந்த வார்த்தைகள் மற்றும் விபரங்களை குறிப்பிட்டால் உங்களின் CVஐ AI தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

அதுபோல, உங்கள் CVயில் இருந்து சிக்கலான வடிவமைப்பு (formatting) மற்றும் படங்களை அகற்றி எளிமையான வடிவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் AI கருவிகள் சிக்கலான வடிவமைப்புகளைப் படிக்க சிரமப்படலாம் மற்றும் முக்கியமான தகவல்களைத் தவறவிடலாம். மேலும், AI ஆல் அங்கீகரிக்க முடியாத வாசகங்கள் அல்லது சுருக்கங்களைத் தவிர்ப்பது சிறந்தது.

CVகளை AI எவ்வாறு ஸ்கேன் செய்து பிரித்தெடுக்கிறது?

Bayt கூற்றுப்படி, விண்ணப்பதாரர்களின் CVகளில் இருந்து பணி அனுபவம், கல்வி மற்றும் திறன் போன்ற விவரங்களைப் பெறுவதற்கு Bayt.com முதலில் AI ஐப் பயன்படுத்துகிறது. அடுத்தபடியாக, வேலை தொடர்பான முக்கிய வார்த்தைகள், சொற்றொடர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு ஏற்ற CVகளை AI ஸ்கேன் செய்கிறது.

இறுதியாக, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளரின் திறன்கள், தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியவை வேலைத் தேவைகளுடன் பொருந்துமா என்பதைத் தீர்மானிக்கலாம். மேலும், Bayt. com இல் Evalufy போன்ற AI தயாரிப்புகள் மூலம், நிறுவனத்தின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு விண்ணப்பதாரரின் மொழிப் பயன்பாடு மற்றும் பேசும் தோரணை உள்ளதா என்பதையும் பகுப்பாய்வு செய்ய முடியும் என்றும் Bayt தெரிவித்துள்ளது.

இத்தகைய AI ஸ்க்ரீனிங் பெரும்பாலும் மனிதர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவுமே பயன்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், போட்டிகள் நிறைந்த உலகத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் தனித்துவமான திறனையும், விடா முயற்சியையும் வெளிப்படுத்தினால் இலக்கை அடைவது சாத்தியமே.