வளைகுடா செய்திகள்

வெளிநாட்டினரின் 66,000 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்த குவைத்..!! – நாட்டுக்கு திரும்பி வந்தாலும் புதிதாக உரிமங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்..!!

குவைத்தில் பணி அனுமதி நிரந்தரமாக ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டினரின் 66,854 செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ்கள் ரத்து செய்யப்படுவதாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகத்தின் இந்த முடிவு, ஓட்டுநர் உரிமத்தின் நம்பகத்தன்மை தொடர்பான அமைச்சர்களின் முடிவுகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, ஷேக் தலால் அல் கலீத், முதல் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரால் நிறுவப்பட்ட அமைச்சர்கள் கமிட்டி, வெளிநாட்டவர்களுக்கு குவைத்தில் வழங்கப்பட்ட டிரைவிங் லைசன்ஸ்களை ஆய்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

எனவே, அமைச்சர்கள் கமிட்டி தற்போதுள்ள டிரைவிங் லைசன்ஸ்களை உன்னிப்பாக ஆய்வு செய்து, அவை அமைச்சர்களின் முடிவுகளுக்கு இணங்குகிறதா என்பதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இறுதியாக, கமிட்டி தனது ஆய்வுகளை முடித்து பரிந்துரைகளை வழங்கியவுடன், அதற்கான அமைச்சரவை முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமீபத்தில் கமிட்டி நடத்திய ஆய்வில், முதற்கட்டமாகக் குவைத்தில் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு 66,584 செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த அனைத்து உரிமங்களும் விதிமுறைகளின்படி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆகையால், இனி இந்த வெளிநாட்டவர்கள் குவைத்துக்குத் திரும்பினால், அவர்கள் தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில், உரிமம் வழங்கும் செயல்முறையை புதிதாக தொடங்க வேண்டும். எவ்வாறாயினும், அவர்களின் முந்தைய உரிமங்களை புதுப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!