ADVERTISEMENT

ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு ஆறு நாட்கள் விடுமுறையை அறிவித்த குவைத்..!!

Published: 8 Jun 2023, 11:25 AM |
Updated: 8 Jun 2023, 11:45 AM |
Posted By: Menaka

இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்படவுள்ள ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு, குவைத் அரசாங்கம் அதன் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை என ஆறு நாட்கள் விடுமுறையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து ஜூலை 3, திங்கட்கிழமை அன்று அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் குவைத் தெரிவித்துள்ளது. மேலும் குவைத்தில் பணிபுரியும் தனியார் துறை ஊழியர்களுக்கும் இதே போன்று ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா வானியல் கணக்கீடுகளின் படி, ஜூன் 28 புதன்கிழமை தொடங்கும் என்று வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, அமீரகத்தில் உள்ள ஊழியர்களும் ஈத் அல் அதாவிற்கு முந்தைய நாளான ஜூன் 27 ம் தேதியிலிருந்து வார விடுமுறை நாட்கள் உட்பட இந்த மாதத்தில் ஆறு நாள் தொடர் விடுமுறையை அனுபவிக்கலாம்.

ADVERTISEMENT

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஈத் அல் அதா பண்டிகையானது, இஸ்லாமிய நாட்காட்டியின் இறுதி மாதமான துல் ஹஜ்ஜாவின் 10 வது நாளில் வருகிறது. இந்த துல் ஹஜ் மாதம் எதிர்வரும் ஜூன் 19 திங்கட்கிழமையன்று தொடங்கும் என்று எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.