ADVERTISEMENT

ஓமான் குடிமக்கள், குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் அதா வாழ்த்துக்களைத் தெரிவித்த மன்னர்…!!

Published: 28 Jun 2023, 3:29 PM |
Updated: 28 Jun 2023, 3:33 PM |
Posted By: Menaka

ஓமானில் புனிதத் திருநாளான ஈத் அல் அதா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாண்புமிகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள், நாட்டில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து மஸ்கட்டில் உள்ள அரசு அலுவலகமான திவான் ஆஃப் ராயல் கோர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிஜ்ரி 1444 ல்  யாத்ரீகர்கள் மக்காவில் புனித ஹஜ் யாத்திரையின் சடங்குகளை நிறைவேற்றும் அதேவேளையில், ஈத் அல் அதாவை மற்ற இஸ்லாமியர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில், மாண்புமிகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் ஓமானில் உள்ள குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

இன்று சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் என ஓமானையும் சேர்த்து அனைத்து வளைகுடா நாடுகளும் ஈத் அல் அதாவை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT