ADVERTISEMENT

குடியிருப்பாளர்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டை எளிதாகப் பெறுவதற்கு புதிய அமைப்பைத் தொடங்கிய ஓமான்!!

Published: 12 Jun 2023, 5:03 PM |
Updated: 12 Jun 2023, 5:57 PM |
Posted By: Menaka

ஓமானின் சுகாதார அமைச்சகமானது (MoH), குடியிருப்பாளர்கள் அவர்களது புதிய ரெசிடென்ஸி கார்டுகளைப் பெறுவதற்காக அல்லது ரினியூவல் செய்வதற்குத் தேவைப்படும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளை எளிதாகப் பெறுவதற்கான அமைப்பைத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தச் சேவையானது ரெசிடென்சி நோக்கத்திற்கான மருத்துவ உடற்தகுதி தேர்வு முறையின் (Medical Fitness Examination System for Residency Purpose) ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம், குடியிருப்பாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சிவில் விவகார சேவை மையங்களில் இருந்ந்து ரெசிடென்சி கார்டைப் பெறுவதற்கு அல்லது ரினியூவல் செய்வதற்கு மற்றும் முதல்முறையாக விசா பெறுவதற்குத் தேவையான மருத்துவ பரிசோதனை முடிவுகளை எளிதாகப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, போலியான மருத்துவ அறிக்கைகளைக் குறைப்பது, வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பது மற்றும் ராயல் ஓமன் காவல்துறையுடன் (ROP) இ- இணைப்பு மூலம் மருத்துவ அறிக்கைகளை வழங்குவதில் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

புதிய அமைப்பு வழங்கும் சேவைகள்: 

  1. பணி நடைமுறைகளை நேரடியாக நிர்வகிக்கவும் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உதவுகிறது.
  2. வேலைக்கான ரெசிடென்ஸி பெறுவதற்கு அல்லது புதுப்பித்தலுக்காக வெளிநாட்டவர்களுக்கு எடுக்கப்படும் மருத்துவப் பரிசோதனை
  3. சுகாதார அட்டை வழங்க அல்லது புதுப்பிக்க மருத்துவ பரிசோதனை
  4. படிப்பு விசாவைப் பெற அல்லது புதுப்பிக்க மருத்துவப் பரிசோதனை
  5. ஃபேமிலி என்ட்ரி விசாவைப் பெற அல்லது புதுப்பிக்க மருத்துவப் பரிசோதனை
  6. தொழில்நுட்ப குழுக்கள் மற்றும் மாலுமிகளுக்கான மருத்துவ பரிசோதனை (பதிவு அல்லது புதுப்பித்தல்)
  7. ஓமானி குடியுரிமையைப் பெற அல்லது மீட்டெடுக்க மருத்துவப் பரிசோதனை