அமீரக செய்திகள்

NRI மலையாளிகள் தொழில் தொடங்க துபாயில் “இன்ஃபினிட்டி சென்டர்” திறப்பு.. திறந்து வைத்த கேரள முதல்வர்.. 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்..!!

துபாயில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான முதல் வெளிநாட்டு Infinity Centre ஐ இந்தியாவின் கேரளா மாநிலம் தொடங்கியுள்ளது. கேரளா ஸ்டார்ட்அப் மிஷனின் (Kerala Startup Mission – KSUM) ஒரு பகுதியாக இந்த இன்ஃபினிட்டி சென்டரை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும், இந்த தொடக்கம் திறமை வாய்ந்த மலையாளிகளுக்கு புதிய கூட்டாண்மை மற்றும் முதலீடுகளைப் பெறுவதற்கான உலகளாவிய வாய்ப்புகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் விஜயன், 1990 ஆம் ஆண்டு தலைநகர் திருவனந்தபுரத்தில், டெக்னோபார்க்கை நிறுவிய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றதாகவும், ஆனால் அதன்பி்றகு IT துறையை மேம்படுத்துவதிலும், விரிவுபடுத்துவதிலும் வாய்ப்பைத் தவறவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இன்றைய இளைஞர்களின் மனநிலை வேலை தேடுவதில் இருக்கும் ஆர்வத்தை விட, வேலையை உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறார்கள். அத்துடன், இந்த இன்ஃபினிட்டி சென்டர், கேரளாவில் ஸ்டார்ட்அப்களுக்கான தொடக்க தளமாகவும், NRIகள் தொழில் அதிபர்களாக மாற சிறந்த வாய்ப்பாகவும் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு பகுதியாகவும் இருக்கும் என்றும் முதல்வர் விஜயன் அவர்கள் கூறியுள்ளார். மேலும் இந்த புதிய திட்டத்தின் மூலம், இந்தாண்டு மேலும் 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர், துபாயில் உள்ள இந்திய தூதர் டாக்டர் அமன் பூரி, லுலு குரூப் இன்டர்நேஷனல் தலைவர் யூசுபலி M.A., ஆஸ்டர் DM ஹெல்த்கேர் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஆசாத் மூப்பன், நோர்கா ரூட்ஸ் துணைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்ஃபினிட்டி சென்டரின் பங்கு:

அமீரகத்தில் இன்ஃபினிட்டி சென்டரின் பார்ட்னராக துபாயை தலைமையிடமாகக் கொண்ட Startup Middle East தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டாண்மையை உறுதிப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் தளத்தின் நிறுவனர் சிபி சுதாகரன் மற்றும் KSUM இன் CEO அனூப் அம்பிகா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் உள்ள இடங்களில் இன்ஃபினிட்டி சென்டர்களை ஒரு தொடங்க KSUM திட்டமிட்டுள்ளது. இந்திய வெளிநாட்டினர் KSUM உடன் இணைந்து தொழில்முனைவோராக மாறுவதற்கான ஒரே இடமாக இந்த இன்ஃபினிட்டி சென்டர்கள் உள்ளன.

அதேசமயம், இந்த சென்டர்கள் அமைந்துள்ள நாடுகளில் ஒரு உலகளாவிய இணைப்பு மையமாக இது செயல்படும். எனவே, NRI சமூகத்தினர் அவர்கள் வசிக்கும் நாட்டில் அல்லது இந்தியாவில் ஒருங்கிணைந்து வணிகங்களை அமைக்கவும், தொழில் தொடங்கவும் இந்த மையம் உதவும் என்று கூறப்படுகிறது.

15,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்:

கேரளாவில் காகிதமற்ற அலுவலகங்களை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு, அறிவுப் பொருளாதாரத்தை நோக்கி கேரளா திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கேரள தலைமைச் செயலாளர் வி.பி. ஜாய் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், மாநிலத்தின் தொழில் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவணங்களின் எண்ணிக்கையை தற்போது இருக்கும் 4,400-லிருந்து 15,000 ஆக உயர்த்துவதே அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!