ADVERTISEMENT

அபுதாபியில் புதிய ‘கிரீன் டிரைவிங் லைசென்ஸ் பேக்கேஜ்கள்’ அறிமுகம்!! சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க புதிய நடவடிக்கை..!!

Published: 21 Jul 2023, 11:28 AM |
Updated: 21 Jul 2023, 11:40 AM |
Posted By: Menaka

அபுதாபியில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பவர்களுக்கு புதிதாக ‘கிரீன் டிரைவிங் லைசென்ஸ் பேக்கேஜ்கள்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட எமிரேட்ஸ் டிரைவிங் கம்பெனி (EDC) மற்றும் துபாயை தளமாகக் கொண்ட கார்பன்சிஃப்ர் (CarbonSifr) ஆகிய நிறுவனங்கள் கார்பன் நடுநிலைமைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து வெளிவந்துள்ளது.

ADVERTISEMENT

EDC உடனான ஒப்பந்தத்தின் படி, கிளைமேட் – டெக் தீர்வு ஆனது (climate-tech solution) ஒரு லைசன்ஸ் பெறுவதற்கான ஃபைலை திறப்பது முதல் டிரைவிங் வகுப்புகள் முடிப்பது வரை முழு செயல்முறையின் போது வெளியிடப்படும் கார்பனின் அளவை வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்துகிறது.

இதுபோன்று வெளியேற்றப்படும் கார்பன் தடயங்களை அளவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில், அவற்றின் உமிழ்வைக் குறைப்பதற்கும் அல்லது அகற்றுவதற்கும் AI- ஆல் பரிந்துரைகள் மற்றும் விருப்பங்களை வழங்க CarbonSifr அதன் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் உதவுகிறது.

ADVERTISEMENT

ஆகவே, இந்த தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்படும் கார்பனின் அளவு பற்றிய விவரங்கள் டிரைவிங் லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கும் வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்படும். பின்னர், அவரால் வெளியேட்றப்பட்ட கார்பனின் அளவிற்கு கூடுதல் பணத்தை செலுத்தி காலநிலைக்கு ஏற்றதாக அதனை மாற்றுவதற்கான (climate-friendly) விருப்பம் அவருக்கு வழங்கப்படும்.

ADVERTISEMENT

இவ்வாறு ஒரு வாடிக்கையாளர் அல்லது நிறுவனம் அல்லது இருவரும் கார்பன் உமிழ்விற்காக செலுத்தும் கூடுதல் பணம், சதுப்பு நில மரங்களை நடுதல் அல்லது கார்பன் பிடிப்பு போன்ற அபுதாபியின் சுற்றுச்சூழல் திட்டத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பணம் செலுத்தியவரின் செயலை அங்கீகரிக்கும் வகையில் லைசன்ஸ் பச்சை நிறத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கார்பன்சிஃப்ரின் இணை நிறுவனர் மற்றும் CEO ஒனூர் எல்குன் அவர்கள் கூறியதாவது; “ஒருவர் EDC மூலம், டிரைவிங் லைசன்சிற்கு விண்ணப்பிக்கும் போது, அவர் எடுக்கின்ற ஒவ்வொரு டிரைவிங் பயிற்சிகளில் தொடங்கி காரை ஓட்டுவது வரையிலான செயல்முறை முழுவதும் வெளியான கார்பனின் அளவை கணக்கிட்டு, அதை நாங்கள் இறுதிப் பயனர்களிடம் தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கூடுதலாக, இந்த CarbonSifr தொழில்நுட்ப தீர்வு ஒரு டாக்ஸி பயணத்தின் உமிழ்வை அறிய அல்லது உணவை டெலிவரி செய்யும் போது கூட பயன்படுத்தப்படலாம். வாகனத்தின் வகை மற்றும் பயணித்த தூரத்தைப் பொறுத்து கார்பன் உமிழ்வுகளின் கணக்கீடுகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இவற்றுடன் சேர்த்து விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், இ-காமர்ஸ், உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோகம், கப்பல் போக்குவரத்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகள் மற்றும் சேவைகளிலும் கார்பன் உமிழ்வை குறைக்க CarbonSifr கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.