அமீரக செய்திகள்

UAE: உணவகத்தின் சிங்க்-ஐச் சுற்றி பூச்சிகள், சுகாதாரமில்லாத உணவு தயாரிப்புகள்..!! பலமுறை கண்டித்தும் மீறல்களைச் சரிசெய்யாத உணவகம்..!! அதிரடியாக மூடிய அதிகாரிகள்..!!

அபுதாபியில் உள்ள ஒரு உணவகம் தொடர்ச்சியாக ஆபத்தை ஏற்படுத்தும் சுகாதார விதிமீறல்களை செய்ததால், உணவகத்தை மூட உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (Adafsa)  வெளியிட்ட தகவல்களின் படி, அபுதாபியில் உள்ள எவர்கிரீன் வெஜ் ரெஸ்டாரன்ட்டின் பிராஞ்ச் 3-இல் நடத்தப்பட்ட சோதனையில், பல உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, கைகழுவும் சிங்க்-ஐச் சுற்றியுள்ள பூச்சிகள், பாத்திரங்கள் சேமிப்பு மற்றும் தயாரிப்பு பகுதிகள், அத்துடன் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் உணவுக்கு சரியான வெப்பநிலையை பராமரிக்கத் தவறியது போன்ற விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இது போன்ற ஆபத்தான சுகாதாரமற்ற சூழல்களை சரிசெய்யவும், உணவு பாதுகாப்பை மேம்படுத்தவும் உணவகத்திற்கு பலமுறை எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், முறையான நடவடிக்கைகளை உணவகம் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், எமிரேட் சட்டத்தில் உள்ளபடி தேவையான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்புத் தேவைகளையும் உணவகம் பூர்த்தி செய்யும் வரை உணவகம் மூடபபடுவதாக  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பொதுமக்களின் உடல்நலனை பாதுகாப்பதற்கும், உணவுப் பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் அபுதாபி முழுவதும் உள்ள உணவகங்களில் ஆணையம் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

ஏற்கனவே, கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதற்காக அல் அய்னில் உள்ள ஹாலோமீட் என்ற உணவகம் மூடப்பட்டது. மேலும், இதுபோன்ற சுகாதார விதிமீறல்களை புகாரளிக்க அபுதாபி அரசின் கட்டணமில்லா எண்ணான 800555ஐ அழைக்குமாறும் குடியிருப்பாளர்களை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!