ADVERTISEMENT

Layover-களுக்கான சிறந்த விமான நிலையமாக மதிப்பிடப்பட்ட DXB..!! ஆடம்பர ஷாப்பிங், ஏராளமான ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை பயணிகளுக்கு வழங்குவதாக தகவல்…

Published: 18 Jul 2023, 9:21 AM |
Updated: 18 Jul 2023, 9:48 AM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) பயணிகளுக்கு வழங்கும் பல்வேறு வசதிகள், ஆடம்பர ஷாப்பிங் அனுபவங்கள் மற்றும் டைனிங் அனுபவங்கள் போன்ற பலவற்றை ஒப்பிடுகையில் Layover எனும் குறுகிய காலம் தங்குவதற்கான சிறந்த விமான நிலையமாக துபாய் விமான நிலையம் மதிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது, Hugo Boss, Tiffany & Co., மற்றும் Rolex போன்ற முன்னணி பிராண்டுகள் அடங்கிய உயர்தர ஷாப்பிங் அனுபவங்களையும், 24 மணிநேர ஜிம், நீச்சல் குளம், குளியலறைகளுடன் கூடிய லாக்கர் அறை மற்றும் மற்றும் புத்துணர்ச்சி பெற திறந்தவெளி தோட்டங்கள் என பல்வேறு வசதிகளையும் பயணிகளுக்கு வழங்குவதாகக் கூறப்படுகிறது.

கூடுதலாக, விமான நிலையத்தில் நீண்ட நேரம் தங்கும் பயணிகள் ஸ்னூஸ்க்யூப் (Snoozecubes), படுக்கைகளுடன் கூடிய சவுண்ட் ப்ரூஃப் பாட்ஸ் (soundproof pods with beds) மற்றும் டச் ஸ்கிரீன் டிவிகள் போன்றவற்றையும் அனுபவிக்கலாம். அத்துடன் அங்குள்ள 325க்கும் மேற்பட்ட உணவு, லாஞ்சிங் மற்றும் ஷாப்பிங் அனுபவங்களை பயணிகள் ரசிக்கலாம்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, நீண்ட லேஓவர்களுக்கு பயனளிக்கும் வகையில் DXB மேலும் பல வசதிகளைக் கொண்டுள்ளதாக Simple Flying தெரிவித்துள்ளது.

இத்தகைய பல்வேறு வசதிகள் குறித்து விவரித்த DXB, ஒவ்வொரு நாளும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை சமாளிப்பது டெர்மினல் சர்வீசஸ் டெலிவரி குழு என்று குறிப்பிட்டது. இந்த குழுவானது, உலகின் பல விமான நிலையங்களை விட சிறந்த சேவையை வழங்குவதற்கு பொறுப்பான முன்னணி சேவைகள் வழங்கும் மிக முக்கியமான வேலைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த சமீபத்திய தரவரிசையில் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் ஷிபோல் (Amsterdam Airport Schiphol), முனிச் சர்வதேச விமான நிலையம் (Munich International Airport), ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் (Hong Kong International Airport) மற்றும் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் இன்டர்நேஷனல் (Hartsfield-Jackson International) ஆகியவை லேஓவர்களுக்கான சிறந்த விமான நிலையங்களின் முதல் ஐந்து பட்டியலில் இடம்பிடித்துள்ளன.