ADVERTISEMENT

கோடையை கூல் ஆக்க வந்தாச்சு துபாயின் ‘Kids Go Free’ பிரச்சாரம்.. இலவச அனுமதி, சிறப்பு தள்ளுபடிகளுடன் எண்ணற்ற சலுகைகள்..!!

Published: 5 Jul 2023, 2:27 PM |
Updated: 5 Jul 2023, 2:43 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் கோடை கால விடுமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில் குழந்தைகளுக்கு எண்ணற்ற சலுகைகள் மற்றும் இலவச அனுமதிகளை வழங்கும் ‘Kids Go Free’ பிரச்சாரத்தை, துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET) நேற்று ஜூலை 4, செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

ஜூலை 4 முதல் ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறவுள்ள இந்த பிரச்சாரத்தில், அமீரக  குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் குழந்தைகளுடன், துபாயில் உள்ள சிறந்த பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் ஹோட்டல்களில் அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அனுபவித்து மகிழலாம்.

இந்த பிரச்சாரம் அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடியுடன் மலிவான விலையில் சிறந்த அனுபவத்தை உறுதியளிக்கிறது. குறிப்பாக, இது குழந்தைகளுக்கு பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள், சிறந்த ஹோட்டல்கள் போன்றவற்றில் தள்ளுபடி பேக்கேஜ்கள், இலவச தங்குமிடங்கள் மற்றும் இலவச உணவு விருப்பங்களையும் வழங்குகிறது.

ADVERTISEMENT

குழந்தைகளின் சம்மரை மறக்க முடியாத அனுபவமாக மாற்றும் இந்த ‘Kids Go Free’ பிரச்சாரத்தில் கூடுதலாக திரையரங்குகள், உட்புற விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் தீம்  பாரக்குகள் போன்ற இடங்களும் அடங்கும் என்றும் சுற்றுலாத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குழந்தைகளுக்கான இந்த பிரச்சாரம் மட்டுமில்லாமல், கோடைகாலத்தை எக்கச்சக்க தள்ளுபடி விற்பனையால் கூலாக்கும் புகழ்பெற்ற துபாய் சம்மர் சர்ப்ரைஸ் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களை உற்சாகமூட்டும் துபாய் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் போன்ற பொழுதுபோக்கு விருப்பங்களும் துபாயில்  நடத்தப்படுகிறது.

ஆகவே, உங்கள் கோடை விடுமுறையை சிறந்த அனுபவங்களால் அலங்கரிக்க விரும்பினால், துபாய் வழங்கும் கோடைகால தள்ளுபடி விற்பனைகள், உணவுச் சலுகைகள் மற்றும் பொழுதுபோக்கு விருப்பங்கள் போன்றவற்றை நீங்களும் மறக்கமால் அனுபவித்து மகிழலாம்.