அமீரக செய்திகள்

துபாயின் சாலைகளில் 4 நிறங்களில் காணப்படும் சைன் போர்டுகள்.. ஒவ்வொன்றும் சொல்லும் அர்த்தம் தெரியுமா..!!

துபாயின் சாலைகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் வண்ணக் குறியிடப்பட்ட நேவிகேஷனல் சைன்களைப் பின்பற்றினால், உங்கள் இலக்கை நீங்கள் மிகத் திறமையாக விரைவில் அடையலாம். அதற்கு முதலில் நீங்கள் தனித்துவமான நீலம், பச்சை, வெள்ளை மற்றும் ப்ரவுன் நிற சைன்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

துபாயின் நேவிகேஷனல் சைன்கள் அரபு மற்றும் ஆங்கில வார்த்தைகளுடன் கூடிய வழக்கமான சைன்களைப் போலல்லாமல், வழிகள் மற்றும் இலக்குகள் பற்றிய அத்தியாவசிய தகவல்களை தெரிவிக்கும் கலர்-குறியீட்டுடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த கலர்-குறியீட்டுக்கு பின்னால் உள்ள அர்த்தத்தையும், அவை எவ்வாறு வாகன ஓட்டுநர்களுக்கு உதவுகின்றன என்பதையும் பற்றிய முழு விபரங்களையும் பின்வருமாறு பார்க்கலாம்.

நீல நிற அடையாளங்கள்:

பெரும்பாலும், நீல நிற சைன் போர்டுகள் எமிரேட்டுகளுக்கு இடையே பயணிக்கும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். அதாவது, வெவ்வேறு எமிரேட்களை இணைக்கும் எமிரேட் பாதையில் (E Route) நீங்கள் இருப்பதை இந்த அடையாளங்கள் குறிப்பிடுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் சின்னமான பருந்தின் அடையாளத்துடன் இந்த நீல நிற சைன் போர்டுகள் இருக்கும்.

பச்சை நிற சைன் போர்டுகள்:

துபாய் எமிரேட்டின் பல்வேறு சாலைகளில் பச்சை நிற சைன் போர்டுகள் இருப்பதைக் காணலாம். துபாய்க்கு செல்லும் பாதையை (D Route) குறிக்கும் இந்த அடையாளங்கள் துபாயில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு வழிகாட்டுகின்றன. இந்த பச்சை நிற சைன் போர்டுகளை துபாயின் சின்னமான ஒரு பெரிய கோட்டை (fort) அலங்கரிக்கிறது.

வெள்ளை நிற சைன் போர்டுகள்:

நகரின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சமூகங்களுக்குள் நுழையும்போது, ​​நீங்கள் செல்லும் தெருக்களின் பெயர்களுடன் வெள்ளை நிற சைன் போர்டுகள் இருப்பதைப் பார்க்கலாம். துபாயின் குடியிருப்பு இடங்களை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்வதற்கு இந்த சைன் போர்டுகள் உதவுகின்றன.

பிரவுன் நிற சைன் போர்டுகள்:

இந்த பிரவுன் நிற சைன்போர்டுகளில் அமீரகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் அடையாளங்கள் போன்ற பகுதிகளைப் பற்றி விவரிக்கும் குறியீடுகள் இடம் பெற்றிருக்கும். இது துபாயின் ஐகானிக் இடங்களை எளிதாக சென்று அடைய உதவுகிறது.

ஆகவே, அடுத்தமுறை இந்த சைன்போர்டுகளை நீங்கள் சாலையில் பார்க்கும்போது, நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடைவதற்கு எளிதான பயணத் திட்டத்தை வழங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் துபாய் மட்டுமில்லாமல் அமீரகத்தில் உள்ள அனைத்து எமிரேட்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!