அமீரக செய்திகள்

போக்குவரத்தை எளிதாக்க புதிய சர்ஃபேஸ் ஜங்க்சனை திறந்த துபாய் RTA..!! விரைவில் முடியவிருக்கும் Dh5.35 பில்லியன் மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டம்..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அல் கலீஜ் ஸ்ட்ரீட், அல் மினா ஸ்ட்ரீட், காலித் பின் அல் வலீத் சாலை மற்றும் அல் குபைபா சாலை ஆகியவற்றுக்கு இடையே போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சிக்னலைஸ் செய்யப்பட்ட சர்ஃபேஸ் ஜங்க்சனைத் திறந்துள்ளது. இது சாலைகளில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை வழங்கும் ஃபால்கன் இன்டர்சேஞ்ச் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

RTA ஆல் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான, ஷேக் ரஷீத் சாலை, அல் மினா ஸ்ட்ரீட், அல் கலீஜ் ஸ்ட்ரீட் மற்றும் கெய்ரோ ஸ்ட்ரீட் வழியாக 13 கிலோமீட்டர் நீளமுள்ள 15 சந்திப்புகளின் கட்டுமானத்தை உள்ளடக்கிய அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியே ஃபால்கன் இன்டர்சேஞ்ச் மேம்பாடு திட்டமாகும்.

மேலும், ஃபால்கன் இன்டர்சேஞ்ச் டெவலப்மென்ட் ஆனது, அல் ஷிந்தகா காரிடாரின் உள்வரும் போக்குவரத்தையும் மேம்படுத்துகிறது. இது மினா ரஷீத்தின் என்ட்ரி மற்றும் எக்ஸிட் இடங்களையும் புதிய பாலத்தின் கீழ் கூடுதல் பார்க்கிங் பகுதிகளையும் வழங்குகிறது. அத்துடன், ஒரு மணி நேரத்திற்கு 28,800 வாகனங்கள் செல்லக்கூடிய மூன்று பாலங்கள் மற்றும் 2,500 மீட்டர் நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதை ஆகியவையும் இந்த திட்டத்தில் அடங்கும்.

இதுவரையிலும் இத்திட்டத்தின் கீழ், அல் கலீஜ் ஸ்ட்ரீட் மற்றும் அல் மினா ஸ்ட்ரீட்டில் உள்ள இரண்டு முக்கிய பாலங்கள், ஏப்ரல் 2023 இல் காலித் பின் அல் வலீத் சாலையின் சுரங்கப்பாதை மற்றும் மே 2023 இறுதியில் தேராவின் திசையில் காலித் பின் அல் வலீத் சாலையில் இருந்து விரிவடையும் ஒரு சாலையைத் தொடர்ந்து தற்போது சிக்னலைஸ் செய்யப்பட்ட சர்ஃபேஸ் ஜங்க்சன் வரையிலான பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் லேண்ட்ஸ்கேப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து கட்டங்களாக சுமார் 5.35 பில்லியன் திர்ஹம் மொத்த மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டம் சுமார் ஒரு மில்லியன் நபர்களுக்கு சேவை செய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த திட்டம் முழுவதுமாக முடிவடையும் பட்சத்தில் இது 2030 ஆம் ஆண்டுகளில் பயண நேரத்தை 104 நிமிடங்களிலிருந்து 16 நிமிடங்களாகக் குறைக்கும் எனவும், இதனால் அடுத்த 20 ஆண்டுகளில் பயணிகளால் சேமிக்கப்படும் நேரம் சுமார் 45 பில்லியன்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!