அமீரக செய்திகள்

துபாயில் அடிக்கடி பஸ்ஸ மிஸ் பண்றீங்களா? உங்களுக்காகவே RTA வழங்கும் பிரத்யேக சேவைகள் பற்றிய முழுவிபரங்களும் இங்கே…

நீங்கள் துபாயில் வசிப்பவரா? அடிக்கடி வெளியில் செல்லும்போது, பேருந்தைத் தவறவிடுகிறீர்களா? அப்படியானால் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வழங்கும் சேவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது கடந்த 2012 இல் RTA அறிமுகம் செய்த SMS சேவை மூலம், உங்கள் நிலையத்திற்கு பேருந்துகள் வந்து சேரும் நேரத்தை விரைவாக குடியிருப்பாளர்கள் பெறலாம்.

இது பொது போக்குவரத்து வழித்தடங்களின் கால அட்டவணைகளை வழங்கும் RTAவின் வோஜதி சேவையிலிருந்து (Wojhati service), பேருந்து நேரத்தைப் பற்றிய நிகழ்நேர தகவலைப் பெற பயணிகளுக்கு உதவுகிறது. ஏற்கனவே, துபாயில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளின் கால அட்டவணை உள்ளது.

எனவே நீங்கள் பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே, பேருந்து நிறுத்த ஐடியின் மூலம் நிறுத்தத்திற்கு வரவிருக்கும் பேருந்துகளின் அட்டவணையை நீங்கள் சரிபார்க்கலாம். மேலும், உங்களிடம் RTA இன் S’hail செயலியைப் பயன்படுத்த இணைய அணுகல் இல்லாத போது, இது உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1. உங்கள் பேருந்து நிறுத்தங்களின் ஐடியைக் குறித்துக் கொள்ளவும்:

உங்கள் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு அருகிலுள்ள அல்லது நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பேருந்து நிறுத்தங்களின் ஐடிகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஐடியானது, பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்துள்ள சைன் போர்டில் இருக்கும்.

நீங்கள் மெட்ரோவைப் பயன்படுத்தினால், நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு ஃபீடர் பேருந்தில் செல்ல வேண்டும் என்றால், மெட்ரோ நிலையத்தின் தகவல் பலகையில், ‘லெஜண்ட்’ பிரிவின் கீழ், பேருந்து நிறுத்த ஐடிகளைக் காணலாம்.

2. 5223 என்ற எண்ணிற்கு SMS அனுப்புதல்:

உங்கள் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பேருந்துகளின் கால அட்டவணை தேவைப்படும் போது, பின்வருவனவற்றை உள்ளிட்டு 5233 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். ‘D’ என்ற எழுத்தைத் தட்டச்சு செய்து, அதைத் தொடர்ந்து இடம் மற்றும் பேருந்து நிறுத்த ஐடியை உள்ளிடவும். எடுத்துக்காட்டு: ‘D 537002’

சில வினாடிகளில் நிறுத்தத்திற்கு வரவிருக்கும் பேருந்துகளுக்கான கால அட்டவணை உங்களுக்கு SMSஇல் அனுப்பப்படும். உதாரணமாக, 10 மணிக்கு SMS அனுப்புகிறீர்கள் என்றால், பத்து மணிக்குப் பிறகு வந்து சேரக்கூடிய பேருந்துகளின் நேரங்கள் கிடைக்கும். அதேசமயம், இந்தச் சேவைக்கு 30 ஃபில்களின் நிலையான SMS கட்டணங்கள் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலம் சேவையைப் பெறுவது எப்படி?

SMS சேவைக்கு மாறாக, உங்களிடம் இணைய அணுகல் இருந்தால், RTAஇன் S’hail செயலியைப் பயன்படுத்தலாம், இது பயணிகளுக்கு பயணத்தின் காலம் மற்றும் கட்டணம் மற்றும் பேருந்து, மெட்ரோ மற்றும் நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றின் புறப்பாடு அட்டவணை உள்ளிட்ட வழி விவரங்களை வழங்கும் நேவிகேஷன் அமைப்பாகும்.

இதில் பின்வரும் வழிமுறைகளில் பின்பற்றுவதன் மூலம் பேருந்துகள் புறப்படும் நேரத்தைப் பெறலாம்:

1. S’hail செயலியில் உள்நுழைந்ததும், உங்கள் மொபைல் திரையின் மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று வரிகளைக் கிளிக் செய்யவும்.

2. அடுத்து, ‘Departures’ என்பதைத் தேர்வு செய்து, உங்கள் பேருந்து நிறுத்த ஐடியை உள்ளிடவும். இறுதியாக, உங்கள் பேருந்து நிறுத்தத்திற்கான பேருந்து அட்டவணையின் முழுமையான பட்டியலைப் பெறலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!