ADVERTISEMENT

துபாய்: இன்று முதல் ஜூலை 23 வரை இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.. குடியிருப்பாளர்களுக்கு RTA ட்வீட்..!!

Published: 9 Jul 2023, 8:40 AM |
Updated: 9 Jul 2023, 10:43 AM |
Posted By: Menaka

துபாயின் முக்கிய சாலைகளில் இன்று, ஜூலை 9 முதல் ஜூலை 23 வரை போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அல் குபைபா மற்றும் அல் மினா ஸ்ட்ரீட்ஸ் இண்டர்செக்சனில் காலித் பின் அல் வலீத் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவுத்துள்ளது.

குறிப்பாக, இன்று ஜூலை 9 நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் போக்குவரத்து தாமதம், ஜூலை 23 ம் தேதி காலை 5 மணி வரை என தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் RTA தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா, குவைத் அல்லது ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்ஸ் உள்ளிட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், இந்த இரு வாரங்களில் கால தாமதம் ஏற்படும் சாலைகளின் வரைபடத்தையும் RTA தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதன் வரைபடத்தை கீழே காணலாம்.

ADVERTISEMENT