ADVERTISEMENT

துபாய்: எமிரேட்ஸ் டிராவில் ஒரு நம்பரில் 100 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை தவறவிட்ட துரதிர்ஷ்டசாலி..!!

Published: 1 Jul 2023, 10:25 AM |
Updated: 1 Jul 2023, 10:41 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த எமிரேட்ஸ் டிராவில் பங்கேற்ற துபாய் குடியிருப்பாளர் ஒருவர், எமிரேட்ஸ் டிராவின் கிராண்ட் பரிசான 100 மில்லியன் திர்ஹமை ($27.3 மில்லியன்) பெறுவதற்கான வாய்ப்பை ஒரு எண் வித்தியாசத்தில் இழந்து அமீரகத்தின் மிகப்பெரிய பரிசுத்தொகையை வென்ற வெற்றியாளர் எனும் பெயரை தவறவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

துபாயில் வசிக்கும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த  ஆண்ட்ரியா பெலன்டி என்ற பெண் தான் இந்த வாய்ப்பை தவறவிட்ட துரதிர்ஷ்டசாலி ஆவார். மேலும் இதைப் பற்றி கேள்விப்பட்ட போது, அவர் வெனிஸில் விடுமுறையில் இருந்ததாக எமிரேட்ஸ் டிரா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது, கிராண்ட் பரிசுக்கான டிக்கெட்டில் உள்ள ஏழு எண்களில் ஆறு எண்களைப் பொருத்தி 100 மில்லியன் திர்ஹம்ஸ் பெரும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு நம்பர் பொருந்த தவறியதினால் கிராண்ட் பரிசைத் தவறவிட்டுள்ளார். இருப்பினும் ஆறு எண்கள் பொருந்தியதால் 250,000 திர்ஹம்களை வென்று மனதை ஆறுதல்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த வெற்றி தனது விடுமுறையை ஆயிரம் மடங்கு சிறப்பாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த வார இறுதியில் நடந்த மூன்று டிராக்களில் மொத்தப் பரிசான 941,367 திர்ஹம்களைப் பகிர்ந்து கொண்ட 11,928 நபர்களில் பெலன்டியும் ஒருவர் ஆவார். இவரை போலவே, டாக்டர் அலி அப்துல்லா என்பவர் கடந்த சனிக்கிழமை FAST 5 ரேஃபிளில் வென்று 75,000 திர்ஹம்களை தட்டிச் சென்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான டாக்டர் அப்துல்லா, தனது அதிர்ஷ்டத்தை பற்றி கேள்விப்பட்ட போது லெபனானில் இருந்ததாக கூறியுள்ளார். மேலும், 15 மில்லியன் திர்ஹம் அல்லது 100 மில்லியன் திர்ஹம்களை வெல்லும் வரை எமிரேட்ஸ் டிராவில் தொடர்ந்து பங்குபெறப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், எமிரேட்ஸ் டிரா இந்த வார இறுதியில் சிறப்பு ரேஃபிளை நடத்தி ஈத் அல் அதாவைக் கொண்டாடுகிறது. எனவே, அதன் மூன்று வழக்கமான டிராக்களில் ஏதேனும் ஒன்றை விளையாடும் எவரும் சிறப்பு ரேஃபிளில் தானாகவே நுழைவார்கள். இதில் 18 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

அமீரகத்தில் மிகப்பெரிய பரிசுத்தொகையை வழங்கும் எமிரேட்ஸ் டிராவானது,  வெள்ளிக்கிழமையன்று EASY6 டிரா, சனிக்கிழமை FAST5 மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 100 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசுக்கான MEGA7 டிரா ஆகிய மூன்று டிராக்களை வாரந்தோறும் நடத்தி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு டிராவும் இரவு 9 மணிக்கு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.