வளைகுடா செய்திகள்

அமீரகத்தில் இருந்து ஓமானுக்கு சாலைப் பயணம்..!! தேவையான ஆவணங்கள், விசா மற்றும் கார் இன்சூரன்ஸ், செல்ல வேண்டிய பாதை பற்றிய முழு விபரங்களும் இங்கே…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஓமானுக்கு சாலைப் பயணம் செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்படியானால், உங்களுக்கான விசா தேவைகள், ஆவணங்கள், கார் காப்பீடு மற்றும் செலவுகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது அவசியம். இது உங்களின் சாலைப் பயணத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய உதவும்.

ஓமானுக்கு சாலை வழியாக செல்லும் UAE குடியிருப்பாளர்களுக்கான விசா தேவைகள்:

நீங்கள் ஓமானிற்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அதற்காக முன்கூட்டியே விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையில்லை. அமீரக குடியிருப்பாளர்கள் (residents) ஓமான் எல்லைக்குள் நுழையும் போது தங்களின் அரைவல் விசாவை பாஸ்போர்ட்டில் முத்திரையிடப்பட்டு பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் ஓமனில் 14 நாட்கள் தங்கலாம்.

மேலும், நீங்கள் அதை விட நீண்ட காலம் தங்க திட்டமிட்டால், முன்கூட்டியே eVisa க்கு விண்ணப்பிக்க வேண்டும், இது உங்களை 30 நாட்கள் வரை ஓமானில் தங்க அனுமதிக்கும் என்று பயண முகவர்கள் கூறியுள்ளனர்.

கூடுதலாக, சில குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லை வழியாக ஓமன் விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், விசா இல்லாத பயணத்திற்கு நீங்கள் தகுதி உடையவரா என்பதை ஓமன் தூதரகத்துடன் சரிபார்ப்பது அல்லது ராயல் ஓமன் போலீஸுக்கு (ROP) 968 2284820 என்ற எண்ணில் அழைப்பது மூலம் தெரிந்து கொள்வது சிறந்தது.

விசா செலவு

  • அரைவல் விசாவிற்கான கட்டணம் – 5 ஓமான் ரியால் (47 திர்ஹம்ஸ்).
  • எக்ஸிட் கட்டணம் – 35 திர்ஹம் (நீங்கள் அமீரகத்தை விட்டு வெளியேறும் போது இது செலுத்தப்பட வேண்டும்).
  • மோட்டார் இன்சூரன்ஸ் (உங்கள் தற்போதைய காப்பீடு ஓமானில் டிரைவிங் செய்வதை கவர் செய்யவில்லை என்றால்) கவரேஜைப் பொறுத்து 106 திர்ஹம் அல்லது அதற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி.
  • குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.

பின்வரும் ஐந்து எல்லைகளைக் கடப்பதன் மூலம் அமீரகத்தில் இருந்து சாலை வழியாக ஓமானுக்குள் நுழையலாம். அவற்றைப் பற்றி சற்று விரிவாக இங்கு பார்க்கலாம்.

அல் தராஹ் பார்டர் போஸ்ட்:

E11 ரூட் ஆனது, ராஸ் அல் கைமா வழியாக அமீரகத்தை ஓமானின் வடக்கில் உள்ள ஓமானின் கவர்னரேட்டான கசாப் ஏரியா ஆப் முசந்தத்துடன் இணைக்கிறது. சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான முசந்தத்தில் டால்பின்களைப் பார்க்கும் வாய்ப்புகளை வழங்கும் படகு பயணங்கள், ஸ்நோர்கெலிங் மற்றும் ஹஜர் மலைத் தொடரில் ஆஃப்-ரோடிங் போன்ற பல்வேறு உற்சாகமான செயல்பாடுகளை அனுபவிக்கலாம்.

UAE/ஓமன் திப்பா எல்லைப் பகுதி:

E99 ரூட், ஃபுஜைரா வழியாக, அமீரக பயணிகளை முசந்தத்தின் தெற்கில், திப்பா மற்றும் ஜாகி பகுதிகளுடன் இணைக்கிறது.

கத்மத் மிலாஹா பார்டர் போஸ்ட்:

நீங்கள் ஃபுஜைரா வழியாக மற்ற திசையில் E99 பாதையில் சென்றால், ஓமானின் வடக்குப் பகுதியில் உள்ள சோஹார் மற்றும் மஸ்கட் நகரங்களை அடையலாம்.

ஹத்தா கிராசிங்/அல் வஜாஜா பார்டர் போஸ்ட்

அல் வஜாஜா கிராசிங், இரு நாடுகளின் எல்லைகளில் குறுக்கு வழி ஆகும். நீங்கள் E44 பாதையில் சென்றால் இந்த குறுக்கு வழியை அடையலாம். நீங்கள் செல்ல விரும்பும் இடம் தலைநகர் மஸ்கட் அல்லது நாட்டின் வடக்குப் பகுதி என்றால், நீங்கள் இந்த பாதையில் செல்லலாம்.

Mezyad பார்டர் போஸ்ட்:

அல் அய்ன் வழியாக ஒமானுக்கு செல்லும் மற்றொரு எல்லை மீசியாத் பார்டர் போஸ்ட் ஆகும். இந்த பார்டர் கிராசிங்கை அடைய வேண்டுமெனில், நீங்கள் E40 பாதையில் செல்லும்போது, ​​சையத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டிலிருந்து வெளியேற வேண்டும். இந்த பார்டர் போஸ்ட் உங்களை பிரபல சுற்றுலாத் தளமான சலாலா உட்பட ஓமானின் தெற்குப் பகுதியுடன் இணைக்கும்.

ஓமான் எல்லையை அடைந்ததும் செய்ய வேண்டிய வழிமுறைகள்:

1. ஓமானுக்கு சாலைப் பயணம் செல்லும்போது, நீங்கள் முதலில் அமீரக எல்லையைக் கடக்க வேண்டும். அப்போது நீங்கள் எக்ஸிட் கட்டணமாக 35 திர்ஹம் செலுத்த வேண்டும்.

2. ஓமான் எல்லையை அடைந்ததும், காரை நிறுத்தி விட்டு இமிகிரேஷன் பிரிவில் நுழைந்தால், அங்கு விசா வழங்கப்படும் மற்றும் பாஸ்போர்ட் முத்திரையிடப்படும்.

3. உங்களிடம் ஏற்கனவே உள்ள வாகன இன்சூரன்ஸ் பாலிசியில் ஓமான் கவரேஜ் உள்ளதா என்பதை பயணம் செய்வதற்கு முன்கூட்டியே உங்கள் காப்பீட்டு வழங்குநரைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள். ஓமானில் ஓட்டுவதற்கு கவரேஜ் இல்லையென்றால், ஓமானுக்கான மோட்டார் இன்சூரன்ஸுக்கு விண்ணப்பிக்கவும்.

4. இது குறித்து https://insurancemarket.ae/ இன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஹிதேஷ் மோட்வானி என்பவர் கூறுகையில், அமீரகத்தில் உள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள் ஓமன் கவரேஜை விரிவான கவரேஜுடன் இலவசமாக வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

5. மேலும், நீங்கள் ஓமான் பார்டரிலேயே ‘ஆரஞ்சு கார்டு’ எனப்படும் ஓமானுக்கான மோட்டார் இன்சூரன்சை 106 திர்ஹம் செலவில் வாங்க முடியும். ஆனால், இது மூன்றாம் தரப்பு கவரேஜ்க்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, விபத்து ஏதேனும் ஏற்பட்டால் கார் காப்பீடு செய்யப்படாது. அத்துடன் நீங்கள் எல்லையில் காப்பீட்டு பாலிசியை வாங்கினாலும், அதன் குறைந்தபட்ச கவரேஜ் ஐந்து நாட்கள் தான்.

6. இறுதியாக, உங்கள் காரை எல்லையில் உள்ள சுங்க அதிகாரிகள் சோதனையிடுவர். அதன் பிறகு, நீங்கள் ஓமானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவீர்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!